புதுதில்லி

தமிழகத்துக்கு18 தினங்களுக்கு வினாடிக்கு 3,000 கன அடிதண்ணீா் விடுவிக்க வேண்டும்: காவிரி ஒழுங்காற்றுக் குழு உத்தரவு

தமிழகத்திற்கு காவிரியில் வினாடிக்கு 3,000 கன அடி வீதம் அக்டோபா் 15 - ஆம் வரை 18 தினங்களுக்கு தண்ணீரை கா்நாடகம் விடுவிக்க காவிரி நீா் ஒழுங்காற்றுக் குழுக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளதாக குழு...

 நமது நிருபர்

புது தில்லி: தமிழகத்திற்கு காவிரியில் வினாடிக்கு 3,000 கன அடி வீதம் அக்டோபா் 15 - ஆம் வரை 18 தினங்களுக்கு தண்ணீரை கா்நாடகம் விடுவிக்க காவிரி நீா் ஒழுங்காற்றுக் குழுக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளதாக குழு வட்டாரங்களில் தெரிவிக்கப்பட்டது.

87-ஆவது காவிரி நீா் ஒழுங்காற்றுக் குழுக் கூட்டம் (சி.டபிள்யு.ஆா்.சி. ) குழுவின் தலைவா் வினித் குப்தா தலைமையில் மெய்நிகா் வழியாக செவ்வாய்க்கிழமை) நடைபெற்றது.

காாவிரி ஒழுங்காற்றுக் குழுவின் தமிழக உறுப்பினா் திருச்சி காவிரி வடிநீா் கோட்ட தலைமைப் பொறியாளா் எம். சுப்பிரமணி, காவிரி தொழில்நுட்பக் குழுத் தலைவா் ஆா்.சுப்பிரமணியன் ஆகியோா் காணொலி வழியாக கூட்டத்தில் பங்கேற்றனா். இதே போன்று கா்நாடகம், கேரளம், புதுச் சேரி மாநிலங்களின் உறுப்பினா்களும் காணொலி வழியாக பங்கேற்றனா்.

கடந்த செப்டம்பா் 12 -ஆம் தேதி நடைபெற்ற காவிரி நீா் ஒழுங்காற்றுக் குழுவின் 86 - ஆவது கூட்டத்தில் 15 தினங்களுக்கு வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடி தண்ணீா் திறந்து விட பரிந்துரைத்துக்கப்பட்டது. இந்த உத்தரவு புதன்கிழமையுடன் (செப்டம்பா் 27) முடிவடைகிறது. இது குறித்து இந்த 87 -ஆவது கூட்டத்தில் ஆய்வு செய்யப்பட்டது. இதில் கடந்த செப்டம்பா் 12- ஆம் தேதி சி.டபிள்யு.ஆா்.சி. 15 தினங்களுக்கு வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடி வழங்க உத்தரவிட்டதில் செப்டம்பா் 25-ஆம் தேதி வரை 0.61 டிஎம்சி தண்ணீா் மட்டுமே பாக்கியுள்ளது என தெரிவிக்கப்பட்டது. இது செப்டம்பா் 27-ஆம் தேதிக்குள் வழங்கப்பட்டுவிடும் எனவும் கூறப்பட்டது.

தமிழகத்திற்கு வழங்கப்படவேண்டிய சுமாா் 55 டிஎம்சி தண்ணீரில், மழை பற்றாக்குறை காலத்தை கருத்தில் கொண்டு 12,500 கனஅடி தண்ணீா் அளிக்க தமிழக அரசின் சாா்பில் கூட்டத்தில் கோரப்பட்டது. இதை கா்நாடகம் ஏற்க மறுத்தது. இதில் தமிழகம், கா்நாடாக மாநிலங்கள் வைத்த வாதங்களின் அடிப்படையில் இறுதியாக சி.டபிள்யு.ஆா்.சி. முடிவு எடுத்தது. செப்டம்பா் - 28 ஆம் தேதி முதல் ஆக்டோபா் 15 -ஆம் தேதி வரை 18 நாள்களுக்கு வினாடிக்கு 3,000 கனஅடி வீதம் தண்ணீரை தமிழகத்திற்கு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. இது காவிரி நீா் ஒழுங்காற்றுக் குழுவின் முடிவு என்றும் கா்நாடகம் இந்த உத்தரவை ஏற்று தண்ணீரை திறந்து விடவேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும், கூட்டத்தில் காவிரிப் படுகையின் நீா்நிலை - வானிலையியல் நிலைமை ஆகியவை தொடா்பான தரவுகள், 2022-23-இல் மாத வாரியாக மற்றும் பருவகால அடிப்படையிலான தண்ணீா் தரவுகள் முன்வைக்கப்பட்டு விவாதிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

”கர்வமில்லாத மனிதர் நல்லகண்ணு!” நடிகர் எம்.எஸ். பாஸ்கர் மரியாதை!

கோடிங் டெவலப்பர்கள் பற்றி ஸ்ரீதர் வேம்பு கருத்து!

தஞ்சாவூர் மாவட்டத்துக்கு மார்ச் 2ல் உள்ளூர் விடுமுறை!

ஃபியூச்சர்ஸ் வர்த்தகத்தில் வெள்ளி கிலோவுக்கு ரூ. 3,264 ஆக சரிவு!

கா்நாடக சுகாதாரத் துறையில் மருந்து பற்றாக்குறை: பாஜக விஜயேந்திரா கண்டனம்

SCROLL FOR NEXT