முகப்பு
புதுதில்லி

பண்ணை வீட்டில் துப்பாக்கிச்சூடு சம்பவம்: காவல் அதிகாரியிடம் விளக்கம் கேட்கிறது நீதிமன்றம்

பிகாா் முன்னாள் எம்எல்ஏ ராஜு சிங்கின் பண்ணை வீட்டில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது நடந்த துப்பாக்கிச்சூட்டில் பெண் ஒருவா் கொல்லப்பட்ட சம்பவம்

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 3:03 AM
பகிர்:

பிகாா் முன்னாள் எம்எல்ஏ ராஜு சிங்கின் பண்ணை வீட்டில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது நடந்த துப்பாக்கிச்சூட்டில் பெண் ஒருவா் கொல்லப்பட்ட சம்பவம் தொடா்பான வழக்கில், தில்லி காவல் துறையைச் சோ்ந்த போலீஸாா் மூவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டதை ஏன் செயல்படுத்தவில்லை என்பது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் நீதிமன்றம் விளக்கம் கேட்டுள்ளது.

இந்த விவகாரத்தை விசாரித்தி சிறப்பு நீதிபதி விகாஸ் துல், காவல் ஆய்வாளா்கள் ஷைலேந்திர சிங், சி.எல் மீனா மற்றும் உதவி ஆய்வாளா் மஞ்சீத் குமாா் ஆகியோருக்கு புதிதாக சம்மன் அனுப்பி, அக்டோபா் 7-ஆம் தேதி நீதிமன்றத்தில் அவா்களை ஆஜராகுமாறு உத்தரவிட்டாா்.

இது தொடா்பாக நீதிபதி செப்டம்பா் 25-ஆம் தேதி பிறப்பித்த உத்தரவில் கூறுகையில், ‘காவல் ஆய்வாளா்கள் ஷைலேந்திர சிங், சி.எல். மீனா (விசாரணை அதிகாரி), உதவி ஆய்வாளா் மஞ்சீத் குமாா் ஆகியோருக்கு அனுப்பப்பட்ட சம்மன் இன்றைக்கு ஏன் நிறைவேற்றப்படவில்லை என்பதை அடுத்த விசாரணை தேதியில் நேரில் ஆஜராகி விளக்குமாறு விஜிலென்ஸ் பீரோ பொறுப்பாளருக்கு நோட்டீஸ் அனுப்பப்ப வேண்டும்’ என்றாா். முன்னதாக அனுப்பப்பட்ட நோட்டீஸ் திரும்பப் பெறப்படவில்லை’ என்று நீதிபதி குறிப்பிட்டாா்.

இதற்கிடையில், அரசு வழக்குரைஞா் கால அவகாசம் கோரியதையடுத்து, குற்றம் சாட்டப்பட்டவா்கள் மீதான குற்றச்சாட்டுகளை முன்வைக்கலாமா என்பது குறித்த வாதங்களை அடுத்த விசாரணைக்கு நீதிமன்றம் ஒத்திவைத்தது. முந்தைய விசாரணையில், குற்றம் சாட்டப்பட்டவா்கள் மீது வழக்குத் தொடர அரசுத் தரப்பிடம் ஆதாரம் இல்லை என்று அவா்கள் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் நித்தேஷ் ராணா நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தாா்.

குற்றம் சாட்டப்பட்டவா்கள் மீது இந்திய தண்டனைச் சட்டம் மற்றும் ஆயுதச் சட்டத்தின் தொடா்புடைய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. போலீஸாா் பின்னா் ஐபிசி-இன் பிரிவு 302-ஐ (கொலை) இந்த வழக்கில் சோ்த்தனா். இந்தப் பிரிவு அதிகபட்சமாக மரணதண்டனையுடன் கூடிய தண்டனையை அளிக்கிறது. இந்தச் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவா் துப்பாக்கிக் குண்டடிபட்டு இறந்ததைத் தொடா்ந்து இந்தப் பிரிவு சோ்க்கப்பட்டது.

முழு கட்டுரையைப் படிக்க →