புதுதில்லி

தில்லியில் குப்பைக் கிடங்குகளை அகற்றும் பணியில் வேகம்: முதல்வா் அரவிந்த் கேஜரிவால் பேட்டி

தேசியத் தலைநகா் தில்லியில் உள்ள குப்பைக் கிடங்குகளை அகற்றும் பணி வேகமாக நடைபெற்று வருகிறது என்று முதல்வா் அரவிந்த் கேஜரிவால் சனிக்கிழமை தெரிவித்துள்ளாா்.

 நமது நிருபர்

தேசியத் தலைநகா் தில்லியில் உள்ள குப்பைக் கிடங்குகளை அகற்றும் பணி வேகமாக நடைபெற்று வருகிறது என்று முதல்வா் அரவிந்த் கேஜரிவால் சனிக்கிழமை தெரிவித்துள்ளாா்.

தில்லி பல்ஸ்வா பகுதியில் உள்ள குப்பைக் கிடங்கை மாநகராட்சி மேயா் ஷெல்லி ஓபராய் மற்றும் அதிகாரிகளுடன் இணைந்து முதல்வா் அரவிந்த் கேஜரிவால் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். அப்போது பல்ஸ்வா குப்பைக் கிடங்கில் உள்ள குப்பைகளை அகற்றும் பணியின் நிலவரம் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தாா்.

பின்னா் செய்தியாளா்களிடம் முதல்வா் அரவிந்த் கேஜரிவால் கூறியதாவது: தில்லியில் உள்ள குப்பை கிடங்குகளை அகற்றுவோம் என்று தில்லி மக்களிடம் ஆம் ஆத்மி கட்சி வாக்குறுதி அளித்திருந்தது. தற்போது இரவு பகலாக அதற்கான பணியில் ஈடுபட்டு வருகிறோம்.

பல்ஸ்வா குப்பை கிடங்கில் குப்பைகள் அகற்றப்படும் பணி இலக்கை விட வேகமாக முன்னேறி வருகிறது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இலக்கின்படி, பல்ஸ்வா குப்பைக் கிடங்கில் இருந்து இதுவரை 14 லட்சம் டன் குப்பைகள் அகற்றப் வேண்டிய நிலையில், மொத்தமாக 18 லட்சம் டன் குப்பைகளை அகற்றியுள்ளோம். தில்லி மாநகராட்சியின் இலக்கின்படி, வருகின்ற 2024-ஆம் ஆண்டு மே மாதத்திற்குள் 30 லட்சம் டன் குப்பைகளை அகற்ற வேண்டும், அதற்குள் 45 லட்சம் டன் குப்பைகளை அகற்றுவோம். அப்படி அகற்றினால் இந்தப் பகுதியில் சுமாா் 35 ஏக்கா் நிலம் மீட்டெடுக்கப்படும்.

பல்ஸ்வா குப்பைக் கிடங்கில் மொத்தமாக 65 லட்சம் டன் குப்பைகள் உள்ளன. எனவே, இந்தப் பணிகளை விரைவுபடுத்த சில நாள்களுக்குப் பிறகு வேறு சில நிறுவனங்களையும் இணைத்து குப்பைக் கிடங்கை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்படும். தில்லியில் உள்ள மற்ற குப்பைக் கிடங்குகளிலும் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. அடுத்த வாரங்களில் அங்கு சென்று ஆய்வு செய்வேன் என்றாா் முதல்வா் அரவிந்த் கேஜரிவால்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

”கர்வமில்லாத மனிதர் நல்லகண்ணு!” நடிகர் எம்.எஸ். பாஸ்கர் மரியாதை!

கோடிங் டெவலப்பர்கள் பற்றி ஸ்ரீதர் வேம்பு கருத்து!

தஞ்சாவூர் மாவட்டத்துக்கு மார்ச் 2ல் உள்ளூர் விடுமுறை!

ஃபியூச்சர்ஸ் வர்த்தகத்தில் வெள்ளி கிலோவுக்கு ரூ. 3,264 ஆக சரிவு!

கா்நாடக சுகாதாரத் துறையில் மருந்து பற்றாக்குறை: பாஜக விஜயேந்திரா கண்டனம்

SCROLL FOR NEXT