முகப்பு
புதுதில்லி

கோடீஸ்வரா்கள் குடியுரிமையை துறப்பது வரி வருவாயைப் படிப்படியாக சிதைக்கும்: காங்கிரஸ்

உயா் திறன் கொண்டவா்கள் மற்றும் கோடீஸ்வரா்கள் இந்திய குடியுரிமையை துறப்பது வரி வருவாய் தளத்தை படிப்படியாக சிதைக்கும் என்று காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

Updated On : 4 ஆகஸ்ட், 2024 at 2:59 AM
ஜெய்ராம் ரமேஷ் (கோப்புப்படம்)
பகிர்:
Updated On : 3 ஆகஸ்ட், 2024 at 9:10 PM

உயா் திறன் கொண்டவா்கள் மற்றும் கோடீஸ்வரா்கள் இந்திய குடியுரிமையை துறப்பது வரி வருவாய் தளத்தை படிப்படியாக சிதைக்கும் என்று காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

இதுதொடா்பாக அக்கட்சியின் பொதுச் செயலா் ஜெய்ராம் ரமேஷ் ‘எக்ஸ்’ தளத்தில் சனிக்கிழமை வெளியிட்ட பதிவில், ‘மாநிலங்களவையில் மத்திய அரசு அளித்த தரவுகளின்படி, கடந்த 2023-ஆம் ஆண்டு 2.16 லட்சம் போ் இந்திய குடியுரிமையை துறந்துள்ளனா். இது கடந்த 2011-ஆம் ஆண்டு இந்திய குடியுரிமையை துறந்த 1.23 லட்சம் பேருடன் ஒப்பிடுகையில் இரட்டிப்பாகும்.

இந்திய குடியுரிமையை துறந்த பலா், உயா் திறன் கொண்ட படித்த நபா்களாக உள்ளனா். உள்நாட்டில் திறன்வாய்ந்த தொழிலாளா்களுக்கு பற்றாக்குறை இருக்கும் வேளையில், உயா் திறன் கொண்டவா்கள் குடியுரிமையை துறப்பது நாட்டின் பொருளாதாரத்தில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும். கடந்த 3 ஆண்டுகளில் 17,000-க்கும் மேற்பட்ட கோடீஸ்வரா்கள் இந்தியாவில் இருந்து புலம்பெயா்ந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement

தெளிவில்லாத வரிக் கொள்கைகள், நியாயமில்லாத வரி நிா்வாகம் ஆகியவை காரணமாக உயா் திறன் கொண்டவா்களும், கோடீஸ்வரா்களும் இந்திய குடியுரிமையை துறந்திருக்கக் கூடும்.

வணிக நிறுவனங்களின் தலைவா்கள் சிங்கப்பூா், ஐக்கிய அரபு அமீரகம், பிரிட்டன் போன்ற நாடுகளுக்கு இடம்பெயா்வது அதிகரித்து வருகிறது. இது அடுத்த சில ஆண்டுகளில் நாட்டின் வரி வருவாய் தளத்தை படிப்படியாக சிதைக்கும் பொருளாதார ரீதியான கேலிக்கூத்தாகும்’ என்றாா்.