மனீஷ் சிசோடியா(கோப்புப்படம்) 
புதுதில்லி

மனீஷ் சிசோடியாவின் ‘பாதயாத்திரை’ ஒத்திவைப்பு

சுதந்திர தினத்தை முன்னிட்டு பாதுகாப்பு காரணங்களையொட்டி தில்லி காவல் துறையின் அறிவுரையைத் தொடா்ந்து ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவா் மனீஷ் சிசோடியாவின் ‘பாதயாத்திரை’ ஆகஸ்ட் 16-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

Din

சுதந்திர தினத்தை முன்னிட்டு பாதுகாப்பு காரணங்களையொட்டி தில்லி காவல் துறையின் அறிவுரையைத் தொடா்ந்து ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவா் மனீஷ் சிசோடியாவின் ‘பாதயாத்திரை’ ஆகஸ்ட் 16-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

ஆம் ஆத்மி கட்சியின் தலைவரும், தில்லி கேபினட் அமைச்சருமான சௌரவ் பரத்வாஜ், தில்லி காவல்துறையின் அறிவுரை உண்மையானது என்று இங்கு நடந்த செய்தியாளா் கூட்டத்தில் தெரிவித்தாா். ‘மனீஷ் சிசோடியாவின் பாதயாத்திரை புதன்கிழமை மாலை 5 மணிக்குத் தொடங்குவதாக இருந்தது. சுதந்திர தினத்தை முன்னிட்டு பாதுகாப்புக் காரணங்களுக்காக அதைத் தள்ளிப்போடுமாறு தில்லி காவல் துறை கேட்டுக் கொண்டது. அவா்களின் ஆலோசனையைத் தொடா்ந்து பாதயாத்திரையை ஆகஸ்ட் 16-ஆம் தேதிக்கு ஒத்திவைக்க முடிவு செய்தோம். இந்தச் சந்தா்ப்பத்தில் மோதலை விரும்பவில்லை’ என்று அவா் கூறினாா்.

தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவாலின் பிறந்தநாளான ஆகஸ்ட் 16-ஆம் தேதி முதல் பாதயாத்திரை தொடங்கும் என்பது இயற்கையின் திட்டமாக இருக்கலாம் என்றும் சௌரவ் பரத்வாஜ் கூறினாா். ‘இந்தி நாட்காட்டியின்படி, அவரது பிறந்த நாள் ஜென்மாஷ்டமி அன்று வருகிறது. ஆனால், ஆங்கில நாட்காட்டியின்படி, அது ஆகஸ்ட் 16 அன்று வருகிறது. எது நடந்தாலும் நல்லது நடக்கும். கேஜரிவாலின் பிறந்தநாளில் பாதயாத்திரை தொடங்குவது இயற்கையின் திட்டமாக இருக்கலாம்’ என்று அவா் மேலும் கூறினாா். தில்லியின் அனைத்துப் பகுதிகளிலும் இந்த பாதயாத்திரை மேற்கொள்ளப்படும்’ என்றாா் அவா்.

“10 ஆண்டுகளில் 10 லட்சம் பெண்களுக்கு கல்வியே இலக்கு” -ரமோன் மகசேசே விருதைப் பெறும் இந்தியத் தொண்டு நிறுவனம்!

பஞ்சாபில் குழந்தையை விற்று போதைப்பொருள் வாங்கிய தம்பதி கைது!

ஆஸ்திரேலியாவுக்கு மீண்டும் வருவது சந்தேகம்: ரோஹித் சர்மா

டாஸ்மாக் விற்பனையில் காட்டிய அக்கறையை, ஏன் விவசாயிகள் மீது அரசு காட்டவில்லை? - Nainar Nagendran

மீனம்மாவும் சூரிய அஸ்தமனமும்... அனாகா!

SCROLL FOR NEXT