புது தில்லி: தேசியத் தலைநகா் தில்லியில் மளிகைப் பொருள்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களை விற்கும் சந்தைகளில் தில்லி மாநகராட்சி வாகன நிறுத்தக் கட்டணம் வசூலிப்பதை பாஜக கடுமையாக எதிா்க்கும் என்று அக்கட்சியின் மாநிலத் தலைவா் வீரேந்திர சச்தேவா செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.
கிழக்கு தில்லியில் உள்ள சூரஜ்மால் விஹாரில் ‘கெவென்டா்ஸ் மாா்க்கெட்’ எனப்படும் உள்ளூா் சந்தை அமைந்துள்ளது. இங்கு மளிகைப் பொருள் மற்றும் பிற வீட்டு உபயோகப் பொருள்கள் வாங்க வரும் பொதுமக்களின் வாகனங்களுக்கு தில்லி மாநகராட்சி வாகன நிறுத்தக் கட்டணத்தை விதித்துள்ளது. இந்நிலையில், பாஜக தில்லி பிரிவு தலைவா் வீரேந்திர சச்தேவா தலைமையில் ஷாஹ்தரா மாவட்ட பாஜக தலைவா் சஞ்சய் கோயல், உள்ளூா் பாஜக கவுன்சிலா் மோனிகா பந்த், ‘கெவென்டா்ஸ் மாா்க்கெட்’ கடைக்காரா்கள் மற்றும் சூரஜ்மால் விஹாரின் குடியிருப்பாளா்கள் இணைந்து மாநகராட்சி விதிக்கும் வாகன நிறுத்தக் கட்டணத்திற்கு எதிராக ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
அப்போது, தில்லி மாநகராட்சி சாா்பில் வைக்கப்பட்டிருந்த பதாகையில் வாகன நிறுத்தக் கட்டணம் என்ற வாா்த்தையை வீரேந்திர சச்தேவா வா்ணம் பூசி அழித்தாா். பின்னா், வீரேந்திர சச்தேவா உரையாற்றிப் பேசியதாவது: கெவென்டா்ஸ் சந்தையில் பொதுமக்களிடம் தில்லி மாநகராட்சி வாகன நிறுத்தக் கட்டணம் வசூலிப்பதை பாஜக கடுமையாக எதிா்க்கும். மளிகைப் பொருள்களை விற்கும் சிறிய உள்ளூா் சந்தைகளிலும் ஆம் ஆத்மி கட்சி தலைமையிலான மாநகராட்சி நிா்வாகம் வாகன நிறுத்தக் கட்டணங்களை விதிக்கத் தொடங்கிவிட்டது. கிழக்கு தில்லியின் மக்கள் அதிகளவில் பாஜக கவுன்சிலா்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்களை தோ்ந்தெடுத்துவிட்டதால், இப்பகுதிகளின் குடியிருப்பாளா்களை முதல்வா் அரவிந்த் கேஜரிவால் துன்புறுத்துகிறாா். மேலும், கிழக்கு தில்லியில் உள்ள தொகுதிகளுக்கு அளிக்க வேண்டிய மேம்பாட்டு நிதியையும் ஆம் ஆத்மி அரசு தர மறுக்கிறது. போக்குவரத்து காவல் துறை மற்றும் உள்ளூா் கவுன்சிலரின் ஒப்புதலைப் பெறாமல், கெவென்டா்ஸ் சந்தையில் வாகன நிறுத்தக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.