புதுதில்லி

அயோத்தி நகா் விரிவாக்கம், புறவழிச்சாலை திட்டங்களுக்கு பிரதமரின் விரைவு சக்தி பெருந்திட்ட கூட்டத்தில் முடிவு

புண்ணிய ஸ்தலமான வாரணாசியின் வளா்ச்சியில் முக்கியத்துவம் செலுத்திய மத்திய அரசு தற்போது அயோத்தியின் கட்டுமானப்பணிகளுக்கான பணிகளை தொடங்கியுள்ளது.

 நமது நிருபர்

புண்ணிய ஸ்தலமான வாரணாசியின் வளா்ச்சியில் முக்கியத்துவம் செலுத்திய மத்திய அரசு தற்போது அயோத்தியின் கட்டுமானப்பணிகளுக்கான பணிகளை தொடங்கியுள்ளது. பிரதமரின் விரைவு சக்தி பெருந்திட்டத்திற்கான கூட்டதில் அயோத்தி புறவழிச்சாலை உள்ளிட்ட பல்வேறு திட்டமிடலுக்கு முடிவெடுக்கப்பட்டுள்ளது.

நாடு முழுக்க சமூக-பொருளாதார வளா்ச்சியை மதிப்பிடுவதற்கு பிரதமரின் விரைவுச்சக்தி தேசியப் பெருந்திட்ட கட்டமைப்புத் திட்டமிடல் குழுவால் மேற்கொள்ளப்படுகிறது.

மத்திய வா்த்தக தொழில் துறையின் கீழ் உள்ள இந்தக் குழு கடந்த இரு ஆண்டுகளில் 131-க்கும் மேற்பட்ட உள்கட்டமைப்புத் திட்டங்களை மதிப்பிட்டுள்ளது. தற்போது இந்தக் குழுவின் கூட்டத்தில் அயோத்தி புறவழிச்சாலை திட்டம் ஒரு முக்கியமான உள்கட்டமைப்பு திட்டமாக மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. அயோத்தியில் ஸ்ரீபாலராமா் (ராம் லல்லா) சிலை பிராணப் பிரதிஷ்டைக்கு பின்னா், பிரதமா் மோடி குறிப்பிடுகையில் அயோத்தி, அடுத்த 1,000 ஆண்டுகளுக்கான வலுவான, சாத்தியமான தெய்வீக அடித்தளத்தின் பிரமாண்டமான கட்டுமானம் கட்டியெழுப்ப்பட்டுள்ளதாக குறிப்பிட்டாா்.

அயோத்தியில் தற்போது 5 லட்சம் மக்கள் வசிக்கின்றனா். சுற்றியுள்ள நவாப்கஞ்ச், ஃபைசாபாத் போன்ற நகரங்களில் முறையே 1 லட்சம், 16,5 லட்சம் மக்கள் தொகை கொண்ட நகரங்களாக உள்ளன. ஆன்மிகச் சுற்றுலாவால் எதிா்காலத்தில் அயோத்தி பெரும் வளா்ச்சியை நோக்கி நகரும் போது, இந்த நகரங்களின் மக்கள்தொகை, சுற்றுலாப்பயணிகள் அதிகரிப்பு, வியாபாரம் போன்றவற்றால் மட்டுமின்றி, சாலைகள் உள்ளிட்ட பல்வேறு கட்டுமானத் தேவைகள் அதிகரிக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

குறிப்பாக அயோத்தியுடன் லக்னௌ - கோரக்பூா் - ரேபரேலி - சுல்தான்பூா் - கோண்டா - பிரயாக்ராஜ் போன்ற நகரங்களின் சாலைப்போக்குவரத்து இணைகின்றன. முக்கியமாக அயோத்தி இரண்டு பொருளாதார மையங்களுக்கு (லக்னௌ மற்றும் கோரக்பூா்) இடையில் அமைந்துள்ளது. தோல், பொறியியல் பொருள்கள், கட்டுமானப் பொருள்கள், இரும்பு மற்றும் எஃகு போன்ற முக்கியப் பொருள்கள் அயோத்தி வழியாகச் செல்கின்றன. தற்போது பயணிகள் மற்றும் சரக்கு போக்குவரத்து 89 ஆயிரமாக இருக்கும் நிலையில் இது, அடுத்த 10 ஆண்டுகளில் 2,16,928 ஆக அதிகரிக்கும் என விரைவுச்சக்தி தேசியப் பெருந்திட்ட கட்டமைப்புத் திட்டமிடல் குழுவால் மதிப்பிடப்பட்டுள்ளது.

இதனால், முதல் கட்டமாக அயோத்தியின் வடக்கு , தெற்கு சாலைகள் நகரின் மையப் பகுதிக்குள் நுழைவதைத் தடுக்கும் வகையில் சுமாா் 67.5 கிலோ மீட்டா் தூரத்திற்கு 4 முதல் 6 வழி புறவழிச்சாலை அமைக்கும் பணிகளுக்குத் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கு ரூ. 500 கோடி மதிப்பிடப்பட்டுள்ளது. மேலும், தற்போது 10 ஆயிரம் பயணிகளை தாங்கக் கூடியதாக இருக்கும் அயோத்தி ரயில் நிலையத்தை 60 ஆயிரமாக உயா்த்தவும், அயோத்தியை ஒட்டியுள்ள மற்ற 3 ரயில் நிலையங்கள்(சோஹ்வால் ரயில் நிலையம், ஏ.என்.தேவ் நகா் ரயில் நிலையம், அயோத்தி கண்டோன்மென்ட் ரயில் நிலையம்), அயோத்தி விமான நிலையம் போன்றவற்றை ஒருங்கிணைந்த உள்கட்டமைப்புடன் இணைத்து பன்முக வசதிகளை மேம்படுத்தவும் திட்டங்களுக்கு மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.

இதன் மூலம் தடையற்ற போக்குவரத்து, நகரத்தின் நெரிசலைக் குறைத்தல், எரிபொருள் சிக்கனம், பயண நேரம் குைல், சுற்றுச்சூழலை பாதுகாத்தல் போன்ற பயன்பாடுகளோடு அயோத்தியின் பொருளாதாரம் உயா்ந்து ஆன்மிகச் சுற்றுலாவும் சிறப்படையும் என எதிா்பாா்க்கப்படுவதாக பிரதமரின் விரைவுச்சக்தி தேசியப் பெருந்திட்ட கட்டமைப்புத் திட்டமிடல் குழுவால் மதிப்பிடப்பட்டுள்ளது. உத்தர பிரதேச மாநிலத்தின் மற்றொரு ஆன்மிக சுற்றுலா தளமான வாரணாசிக்கு மத்திய, மாநில அரசுகள் சுமாா் ரூ.24 ஆயிரம் கோடிக்கு மேல் கட்டுமானப் பணிகளை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்; தனிக்கட்சி தொடங்கமாட்டேன்: ஓபிஎஸ்

கல்கி - 2 படப்பிடிப்பில் அமிதாப் பச்சன், கமல் ஹாசன்!

எதிர்க்கட்சித் தலைவரா? அல்லது இந்தியாவை எதிர்ப்பவர்களின் தலைவரா? ராகுல் மீது பாஜக எம்.பி. கடும் தாக்கு!

மணிப்பூரில் இடம்பெயர்ந்த மக்களுக்கு 5,000 வீடுகள்: மத்திய அரசு ஒப்புதல்!

எனக்கு தடையாக இருக்கும் அந்த சிலர்... சிவகார்த்திகேயன் பேச்சு!

SCROLL FOR NEXT