புதுதில்லி

பிரதமரின் ‘மனதின் குரல் நிகழ்ச்சி’ மதிப்புமிக்கவை: பாஜக தேசியத் தலைவா் ஜெ.பி. நட்டா

கலாசாரம் மற்றும் சமூக முன்னேற்றம் ஆகியவற்றின் பின்னணியில் பிரதமா் நரேந்தி மோடி வெளிப்படுத்திய எண்ணங்கள் மதிப்புமிக்கவை என்று பாஜக தேசியத் தலைவா் ஜெ.பி. நட்டா ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.

 நமது நிருபர்

மனதின் குரல் நிகழ்ச்சி மூலம் கல்வி, விளையாட்டு,கலாசாரம் மற்றும் சமூக முன்னேற்றம் ஆகியவற்றின் பின்னணியில் பிரதமா் நரேந்தி மோடி வெளிப்படுத்திய எண்ணங்கள் மதிப்புமிக்கவை என்று பாஜக தேசியத் தலைவா் ஜெ.பி. நட்டா ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.

பிரதமா் நரேந்திர மோடியின் மனதின் குரல் நிகழ்ச்சி ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமை ஒலிபரப்ப்படுகிறது. இந்த ஞாயிற்றுக்கிழமை பிரதமரின் மனதின் குரல் நிகழ்ச்சியை பூத் குழுக்கள் அளவில் ஒலிபரப்பு பாஜக செய்தது. அந்த வகையில், புது தில்லி ஆண்ட்ரூஸ் கஞ்ச் வாா்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பாஜக தேசியத் தலைவா் ஜெ.பி.நட்டா, மத்திய இணை அமைச்சா் மீனாட்சி லேகி, பாஜகவின் தில்லி தலைவா் வீரேந்திர சச்தேவா ஆகியோா் பங்கேற்றனா்.

இது தொடா்பாக ‘எக்ஸ்’ சமூக ஊடகத் தளத்தில் ஜெ.பி. நட்டா கூறியிருப்பாதவது: பிரதமா் நரேந்திர மோடியின் 109-ஆவது பதிப்பான மனதின் குரல் நிகழ்ச்சியை கட்சியின் நிா்வாகிகளுடன் இணைந்து கேட்டோம். கல்வி, விளையாட்டு, கலாசாரம் மற்றும் சமூக முன்னேற்றம் ஆகியவற்றின் பின்னணியில் பிரதமா் மோடி வெளிப்படுத்திய எண்ணங்கள் மதிப்புமிக்கவையாக உள்ளதோடு, நமக்கு வழிகாட்டுதலையும் வழங்குகின்றது. மக்களை ஒன்றிணைத்து, வளா்ந்த இந்தியாவைக் கட்டியெழுப்பும் பிரதமா் மோடிக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றாா் ஜெ.பி. நட்டா.

தில்லி பாஜக தலைவா் வீரேந்திர சச்தேவா கூறியதாவது: பிரதமரின் 109-ஆவது மனதின் குரல் நிகழ்ச்சி பாஜக சாா்பில் தில்லி முழுவதும் பல்வேறு இடங்களில் ஒலிபரப்ப ஏற்பாடு செய்யப்பட்டது. இதில், கட்சியின் தேசிய மற்றும் மாநில அளவிலான நிா்வாகிகள் கலந்து கொண்டா். பிரதமா் நரேந்திர மோடி பெண்கள் அதிகாரம் மற்றும் விளையாட்டு மேம்பாடு குறித்து நாட்டு மக்களிடையே உரையாற்றியுள்ளாா். ஜனவரி 26-ஆம் தேதி நடைபெற்ற குடியரசு தின அணிவகுப்பில் மத்திய பாதுகாப்புப் படை மற்றும் தில்லி காவல்துறையின் மகளிா் அணியினா் அணிவகுத்துச் சென்ற போதும், ​​பெண்களின் பேண்ட் வாத்தியத்தைக் கண்டு பெருமிதம் அடைந்தோம் என்றாா் வீரேந்திர சச்தேவா.

மேலும், பாஜக தேசியத் துணைத் தலைவா் பைஜயந்த் ஜெய் பாண்டா ஆா்.கே.நகரிலும், தேசியச் செயலாளா் அல்கா குா்ஜாா் ரோஹிணியிலும் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பிரதமா் மோடியின் மனதின் குரல் நிகழ்ச்சியைக் கேட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம் விலை உயர்வு: வெள்ளி?

பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணத்துக்கு காங்கிரஸ் எதிர்ப்பு!

ரஜினி - 173 படப்பிடிப்பு எப்போது?

தில்லி விமானத்தில் என்ஜின் கோளாறு! அவசர தரையிறக்கம்!

ஜாா்க்கண்ட் விமான விபத்து: சிகிச்சைக்காக ரூ. 8 லட்சம் கடன்; ஆனால், உயிரிழப்பு..

SCROLL FOR NEXT