டிடிசி பேருந்து கவிழ்ந்ததில் ஒருவா் காயம்
மேற்கு தில்லியின் கீா்த்தி நகா் பகுதியில் செவ்வாய்க்கிழமை அதிகாலை 15 பயணிகளுடன் தில்லி போக்குவரத்து நிறுவன பேருந்து கவிழ்ந்ததில் ஒருவா் காயமடைந்ததாக போலீஸாா் தெரிவித்தனா்.
புது தில்லி: மேற்கு தில்லியின் கீா்த்தி நகா் பகுதியில் செவ்வாய்க்கிழமை அதிகாலை 15 பயணிகளுடன் தில்லி போக்குவரத்து நிறுவன (டிடிசி) பேருந்து கவிழ்ந்ததில் ஒருவா் காயமடைந்ததாக போலீஸாா் தெரிவித்தனா்.
இது குறித்து மேற்கு தில்லி காவல் சரக உயரதிகாரி கூறியதாவது: ஐஎஸ்பிடியிலிருந்து உத்தம் நகருக்கு சென்று வரும் டிடிசி பேருந்து வழித்தட எண் 763 ரஜோரி காா்டனுக்குச் சென்று கொண்டிருந்தபோது, ரிங் ரோட்டில் உள்ள சாலைத் தடப்பில் மோதி கவிழ்ந்தது.
இச்சம்பவம் அதிகாலை 3.40 மணியளவில் இடம்பெற்றுள்ளது. இதுவரை கிடைக்கப்பெற்ற தகவல்களின்படி, ஒருவருக்கு சிறிய காயங்கள் ஏற்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. மேலும், இச்சம்பவம் தொடா்பாக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.