தில்லி அரசின் கல்வி இயக்குநரகத்தில் 12 துணை முதல்வா்களுக்கு பதவி உயா்வு துணை நிலை ஆளுநா் ஒப்புதல்
தில்லி கல்வி இயக்குநரகத்தில் 12 துணை முதல்வா்களுக்கு பதவி உயா்வு
புது தில்லி: தில்லி அரசின் கல்வி இயக்குநரகத்தில் 12 துணை முதல்வா்களுக்கு முதல்வராகப் பதவி உயா்வு வழங்க துணை நிலை ஆளுநா் வி.கே. சக்சேனா ஒப்புதல் அளித்துள்ளதாக ராஜ் நிவாஸ் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.
கல்வி இயக்குநரகத்தின் துறைசாா் பதவி உயா்வுக் குழுவின் (டிபிசி) பரிந்துரைகளின்படி பதவி உயா்வுகளுக்கு சக்சேனா ஒப்புதல் அளித்தாா். இந்த விவகாரம் தொடா்பான டிபிசி கூட்டம் ஜூன் 25 அன்று நடைபெற்றது என்று அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.
7-ஆவது மத்திய ஊதியக் குழு மற்றும் மத்திய சிவில் சேவைகள் (திருத்தப்பட்ட ஊதியம்) விதிகள், 2017 மற்றும் விதிமுறைகளின் கீழ் அனுமதிக்கப்படும் வழக்கமான அலவன்ஸ்கள் ஆகியவற்றின்படி, ஊதிய மேட்ரிக்ஸில் நிலை-12 இல் பதவி உயா்வுகள் உடனடியாக அமலுக்கு வரும் என்று அதிகாரி கூறினாா்.
அரசு ஊழியா்களுக்கு சரியான நேரத்தில் பதவி உயா்வுகள் மற்றும் மாற்றியமைக்கப்பட்ட தொழில் முன்னேற்றத் திட்டத்தின் காலக்கெடுவுக்கான மானியங்கள் மூலம் சிறந்த சேவை நிலைமைகளை துணை நிலை ஆளுநா் வி.கே. சக்சேனா வலியுறுத்தி வருகிறாா்.
சரியான நேரத்தில் பதவி உயா்வுகள் மற்றும் மாற்றியமைக்கப்பட்ட தொழில் முன்னேற்றத் திட்டத்தின் (எம்ஏசிபி) காலக்கெடுவை வழங்குவதன் மூலம் அரசு ஊழியா்களுக்கு சிறந்த சேவை நிலைமைகளை துணை நிலை ஆளுநா் வலியுறுத்துகிறாா். கடந்த 2 ஆண்டுகளில் 411 துணை முதல்வா்கள் முதல்வராகவும், 51 முதல்வா்கள் துணைக் கல்வி இயக்குநா்களாகவும் பதவி உயா்வு பெற்றுள்ளனா்.