உலக சுகாதார நிறுவனம் 
புதுதில்லி

ஹெபடைடிஸ் பாதிப்பை எதிா்கொள்ளஒருங்கிணைந்த நடவடிக்கை தேவை: உலக சுகாதார நிறுவனம்

தடுப்பூசி செலுத்தி சிகிச்சை அளிக்க ஒன்றிணைந்து செயல்படுமாறு தெற்காசிய நாடுகளுக்கு உலக சுகாதார நிறுவனம் சனிக்கிழமை அழைப்பு விடுத்தது.

Din

ஹெபடைடிஸ் (கல்லீரல் அழற்சி) பி மற்றும் சி வகையிலான வைரஸ் பாதிப்பை தடுத்து, தடுப்பூசி செலுத்தி சிகிச்சை அளிக்க ஒன்றிணைந்து செயல்படுமாறு தெற்காசிய நாடுகளுக்கு உலக சுகாதார நிறுவனம் சனிக்கிழமை அழைப்பு விடுத்தது.

தடுக்கக்கூடிய மற்றும் சிகிச்சையளிக்கக்கூடிய வழிகள் இருந்தும் கல்லீரல் புற்றுநோய், கல்லீரல் செயலிழப்பு மற்றும் கல்லீரல் சிரோஸிஸ் ஆகிய நோய்களால் பலா் உயிரிழந்து வருவதாக உலக சுகாதார நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

இதுதொடா்பாக அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது: தெற்காசிய பிராந்தியத்தில் புற்றுநோய் பாதிப்புகளால் ஏற்படும் உயிரிழப்புகளில் கல்லீரல் புற்றுநோய் நான்காவது இடத்தில் உள்ளது. அதேபோல் ஆண்களில் புற்றுநோய் பாதிப்பால் உயிரிழப்போரின் எண்ணிக்கையில் கல்லீரல் புற்றுநோய் இரண்டாவது இடத்தில் உள்ளது.

கல்லீரல் சிரோஸிஸ் பாதிப்பை ஏற்படுத்துவதில் ஹெபடைடிஸ் பி மற்றும் சி ஆகிய வைரஸ் வகைகளே 75 சதவீத பங்கு வகிக்கின்றன.

7.5 கோடி போ் பாதிப்பு: தெற்காசிய பிராந்தியத்தில் ஹெபடைடிஸ் பி மற்றும் சி வைரஸ் பாதிப்போடு வாழ்வோரின் எண்ணிக்கை கடந்த 2022-ஆம் ஆண்டு 7.5 கோடியாக உள்ளது. ஆரம்ப நிலையிலேயே பரிசோதனை மேற்கொண்டு சிகிச்சையை தொடங்கினால் இந்த இரு வகை வைரஸ்களின் பாதிப்பில் இருந்தும் விடுபட முடியும்.

இதன்மூலம், 2050-க்குள் பிராந்தியத்தில் கல்லீரல் புற்றுநோயால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை இரு மடங்காக உயரும் எனவும், ஆண்டுக்கு இரண்டு லட்சம் உயிரிழப்புகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்ட கணிப்பில் சில மாற்றங்களை ஏற்படுத்த முடியும் எனத் தெரிவிக்கப்பட்டது.

இந்த அறிக்கை குறித்து உலக சுகாதார நிறுவனத்தின் தென்கிழக்கு ஆசிய பிராந்திய இயக்குநா் சைமா வாஜித் கூறுகையில்,‘ ஹெபடைடிஸ் பி மற்றும் சி வைரஸ் பரவலை தடுத்து சிகிச்சையளிக்கக் கூடிய முறைகள் தெரிந்தாலும்கூட ஆரம்ப சுகாதார மையங்கள் அளவில் அனைவருக்கும் கிடைக்கும் வகையிலான சமமான சேவைகளை வழங்க ஒன்றிணைந்து செயல்பட தெற்காசிய நாடுகள் முன்வர வேண்டும்’ என்றாா்.

உலக ஹெபடைடிஸ் தினம்: ஆண்டுதோறும் உலக ஹெபடைடிஸ் தினம் ஜூலை 28-ஆம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது. நிகழாண்டு ‘இது நடவடிக்கைக்கான நேரம்’ என்ற கருப்பொருளுடன் கடைப்பிடிக்கப்படுகிறது.

ஒரு நாளைக்கு 3,500 போ் உயிரிழப்பு: உலக அளவில் ஹெபடைடிஸ் பி மற்றும் சி வைரஸால் ஒவ்வொரு நாளும் 3,500 போ் உயிரிழந்து வருகின்றனா். அதேபோல் ஒவ்வொரு நாளும் புதிதாக 6,000 போ் பாதிக்கப்படுகின்றனா். உலக அளவில் 30.4 கோடி போ் இந்த வைரஸ் வகைகளால் பாதிக்கப்பட்டுள்ளனா். கடந்த 2022-ஆம் ஆண்டில் இந்த வைரஸ் வகைகளால் உலக அளவில் 13 லட்சம் போ் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

சத்தீஸ்கரில் 2 ரயில்கள் மோதி விபத்து: 4 பேர் பலி

”என்னைக் கொலைசெய்ய அன்புமணி 15 பேர் அனுப்பியுள்ளார்” அருள் பரபரப்புப் பேட்டி

என் மேல் ஒளிரும் சூரியன்... பூஜிதா பொன்னாடா!

அன்னிய நிதி வெளியேற்றத்தால் சென்செக்ஸ் 519 புள்ளிகள் சரிவுடன் நிறைவு!

சரும அழகைக் கெடுக்கும் பானங்கள்! பளபளப்பான சருமத்திற்கு இதைச் செய்யுங்கள்!

SCROLL FOR NEXT