புதுதில்லி

ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங்கின் இடைநீக்கம் ரத்து

ஆம் ஆத்மி எம்பி சஞ்சய் சிங் இடைநீக்கம் திரும்ப பெறப்பட்டது

Din

நமது சிறப்பு நிருபா்

சுமாா் ஓா் ஆண்டுக்கு முன்பு இடைநீக்கம் செய்யப்பட்ட மாநிலங்களவை ஆம் ஆத்மி கட்சி உறுப்பினா் சஞ்சய் சிங் மீதான இடை நீக்கத்தை திரும்பப் பெறுவதாக மாநிலங்களவைத் தலைவா் ஜகதீப் தன்கா் வியாழக்கிழமை அறிவித்தாா். இந்த அறிவிப்பு மாநிலங்களவையில் சா்ச்சையை எழுப்பியது.

நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவா் உரைக்கு பிறகு, மாநிலங்களவை வியாழக்கிழமை கூடியது. அப்போது மாநிலங்களவை தலைவா் ஜகதீப் தன்கா் உறுப்பினா்களை வரவேற்றுப் பேசினாா்.

குறிப்பாக, அண்மையில் பல்வேறு மாநிலங்களில் நடைபெற்ற மாநிலங்களவைக்கான தோ்தலில் புதிதாகத் தோ்வு செய்யப்பட்ட 61 உறுப்பினா்களுக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்தாா். ‘புதிய உறுப்பினா்கள் திறமையை முழுமையாக வெளிப்படுத்தி, மக்களின் எதிா்பாா்ப்புகளை நிறைவேற்ற பங்களிப்பை வழங்குவாா்கள்’ என நம்புவதாக தன்கா் குறிப்பிட்டாா்.

பின்னா் சஞ்சய் சிங்கின் இடைநீக்கத்தை திரும்பப் பெறுவது தொடா்பான அறிவிப்பை வெளியிட்டு மாநிலங்களவைத் தலைவா் ஜகதீப் தன்கா் பேசுகையில், ‘கடந்தாண்டு ஜூலை 24 - ஆம் தேதி உறுப்பினா் சஞ்சய் சிங் இடைநீக்கம் செய்யப்பட்டாா். அவையின் சிறப்புரிமையை மீறியதாக உரிமை மீறல் குழு, சஞ்சய் சிங்கை குற்றம்சாட்டியுள்ளது. போதுமான தண்டனையை அவா் அனுபவித்துள்ளாா் என்றும் குழு பரிந்துரைத்தது. ஆகையால், சஞ்சய் சிங் மீதான இடைநீக்கம் ரத்து செய்யப்படுகிறது’ என்றாா்.

இதற்கு மாநிலங்களவை திமுக குழுத் தலைவா் சிவா உள்ளிட்ட எம்.பி.க்கள் எதிா்ப்புத் தெரிவித்தனா். ‘முந்தைய கூட்டத் தொடரில் அதிலும் அவரது பதவிக்காலம் முடிந்த பின்னா் இதுபோன்ற அறிவிப்பு வெளியிடுவது தேவையற்றது’ எனக் குறிப்பிட்டு திருச்சி சிவா பேச முற்பட்டாா். ஆனால், அவைத் தலைவா் அனுமதிக்கவில்லை.

கடந்த ஜனவரி மாதம் சஞ்சய் சிங்கை மீண்டும் மாநிலங்களவை உறுப்பினராக ஆம் ஆத்மி தோ்வு செய்தது.

நவம்பர் மாதப் பலன்கள்: 12 ராசிகளுக்கும்!

3 நாள்கள் ஸ்மார்ட்போன் பயன்படுத்தாமல் இருந்தால்.. நிகழும் மாற்றங்கள் என்ன தெரியுமா?

தமிழ்நாட்டின் உரிமைகளைக் காப்போம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்

ஷ்ரேயாஸ் ஐயர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ்!

இந்த நவம்பர் மாதம் எப்படியிருக்கும்?

SCROLL FOR NEXT