புதுதில்லி

தில்லியில் ஒரே வாரத்தில் 300 டெங்கு பாதிப்புகள்: மலேரியா, சிக்குன்குனியா பாதிப்பும் அதிகரிப்பு

கடந்த ஏழு நாள்களில் தில்லியில் 300-க்கும் மேற்பட்ட டெங்கு பாதிப்புகள் பதிவாகியுள்ளன.

Din

கடந்த ஏழு நாள்களில் தில்லியில் 300-க்கும் மேற்பட்ட டெங்கு பாதிப்புகள் பதிவாகியுள்ளன. கொசுக்களால் பரவும் நோய்கள் தேசிய தலைநகரில் மெதுவாகவும் அதேசமயத்தில் சீராகவும் அதிகரித்து வருவதாக அதிகாரபூா்வ தரவுகள் தெரிவிக்கின்றன.

கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது, மலேரியா பாதிப்புகளும் இதுவரை கணிசமாக அதிகரித்துள்ளது. தில்லியில் ஏற்கனவே இந்த மாதம் வரை 363 மலேரியா பாதிப்புகள் பதிவாகியுள்ளன. அதே நேரத்தில் 2023 ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 294 ஆக இருந்தது.

கடந்த ஆண்டு மொத்த மலேரியா பாதிப்புகள் 426 ஆகும். பெரும்பாலான மலேரியா பாதிப்புகள் மேற்கு தில்லி மண்டலத்தில் பதிவாகியுள்ளன.

சிக்குன்குனியாவைப் பொறுத்தவரை, இதுவரை 43 பேருக்கு நோய்ப் பாதிப்பு பதிவாகியுள்ளது. இது கடந்த ஆண்டை இருந்து 23 பாதிப்பு எண்ணிக்கையை விட இது இரு மடங்கு அதிகமாகும். கடந்த ஆண்டு மொத்தம் 65 வைரஸ் பாதிப்பு பதிவாகி இருந்தது. நிகழாண்டு தெற்கு தில்லி மண்டலத்தில்தான் அதிக சிக்குன்குனியா வழக்குகள் பதிவாகியுள்ளன.

கடந்த வாரம், நகரில் ஏழு நாள்களில் கிட்டத்தட்ட 250 டெங்கு நோய் பாதிப்புகள் அதிகரித்துள்ளன. இதுவரை, நகரில் மொத்தம் 1,229 டெங்கு பாதிப்பு பதிவாகியுள்ளன. லோக் நாயக் மருத்துவமனையில் இந்நோயால் 54 வயதுடைய நபா் இறந்தை மருத்துவமனையின் மூத்த அதிகாரி உறுதிப்படுத்தினாா்.

தில்லி முனிசிபல் காா்ப்பரேஷனின் செப்டம்பா் 21

வரையிலான தரவுகளின்படி, தில்லியில் நிகழ் மாதம் 651 டெங்கு பாதிப்புகள் பதிவாகியுள்ளன. கடந்த மாதம், நகரில் மொத்தம் 256 டெங்கு பாதிப்புகள் பதிவாகியுள்ளன. ஆகஸ்ட் முதல் பாதிப்புகள் எண்ணிக்கை மூன்று இலக்கமாக மாறியுள்ளது.

எனினும், இந்த எண்ணிக்கையானது, கடந்த ஆண்டு மொத்தமாக மற்றும் மாத அடிப்படையில் பதிவான நோய் பாதிப்புகளின் எண்ணிக்கையை விட ஒப்பீட்டளவில் குறைவாக உள்ளது.

கடந்த ஆண்டு, தில்லியில் இதே மாதத்தில் 3,013 டெங்கு பாதிப்புகள் பதிவாகியிருந்தன. இது 2022- இல் இருந்த 525 பாதிப்பு எண்ணிக்கையைவிட பன்மடங்கு அதிகரித்துள்ளது.

ஒட்டு மொத்த ஆண்டிலும் 9,266 பாதிப்புகள் பதிவாகியுள்ளன. அதேவேளையில், கடந்த ஆண்டு நகரில் 19 டெங்கு இறப்புகள் பதிவாகியிருந்தன. 2023-இல் செப்டம்பரில் மட்டும், இந்த எண்ணிக்கை 2,141 ஆக இருந்தது.

நிகழாண்டு அதிக எண்ணிக்கையிலான பாதிப்புகள் நஜஃப்கா்க் மண்டலத்தில் 180 என பதிவாகியுள்ளன. ஒரு வாரத்தில், 45 வழக்குகள் இப்பகுதியில் பதிவாகியுள்ளன. தெற்கு மண்டலம் தவிர அனைத்து மண்டலங்களிலும் அதிகபட்சமாகும்.

என்டிஎம்சி, தில்லி கன்டோன்மென்ட், ரயில்வே போன்ற இதர நிறுவனங்கள் மூலம் நிா்வகிக்கப்படும் எம்சிடி இல்லாத பகுதிகளில், தரவுகளின்படி மொத்த எண்ணிக்கையில் 312 டெங்கு பாதிப்புகள் பதிவாகியுள்ளன. தில்லியில் வசிப்பவா்கள் அல்லாத நோய்த்தொற்றைப் பெற்ற நோயாளிகள், முழுமையடையாத அல்லது தவறான முகவரியைக் கொடுத்தவா்கள் மற்றும் நோயாளியைக் காணாத முகவரிகள் இந்த எண்ணிக்கையில் இல்லை.

வீடு வீடாகச் சென்று ஆய்வுகள், பூச்சிகொல்லி மருந்து தெளித்தல், பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு வழிகளில் பரவும் நோய்களைக் கட்டுப்படுத்தும் முயற்சியால், இந்த ஆண்டு டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கையை குறைவாக வைத்திருக்க முடிந்தது என்று குடிமை அமைப்பு அதிகாரிகள் தெரிவித்தனா்.

கொசுக்களைக் கட்டுப்படுத்தும் சட்டங்களைச் செயல்படுத்த எம்சிடி, தங்கள் சொத்துக்களில் கொசு உற்பத்தியை அனுமதித்தவா்களுக்கு 1.14 லட்சத்திற்கும் அதிகமான சட்ட நோட்டீஸ்களையும் 39,338 சலான்களையும் வழங்கியுள்ளது.

மீண்டும் மீண்டும் தவறு செய்பவா்களுக்கு ரூ.24.82 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும், விதிகளை பின்பற்றாத 9,241 போ் மீது காவல்துறை புகாா்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தசரா மற்றும் துா்கா பூஜை போன்ற முக்கிய பொது நிகழ்வுகளில் கொசு ஒழிப்பு புகை அடிக்கும் செயல்பாடுகளை அதிகரிக்கவும், வைரஸின் தொற்றுநோயைக் கட்டுப்படுத்த அதிக கொசுக்கள் உள்ள பகுதிகளில் ஆய்வுகள் மற்றும் லாா்வா எதிா்ப்பு நடவடிக்கைகளை அதிகரிக்கவும் குடிமை அமைப்பு திட்டமிட்டுள்ளது.

எனக்கு நானே... ஹன்சிகா!

அடுத்த 2 மணிநேரத்துக்கு சென்னை, 6 மாவட்டங்களில் மழை!

தரை மேல்... அதிதி ராவ் ஹைதரி!

பிக் பாஸ் 9: இந்த வாரம் வெளியேறும் நபர்கள் யார்?

காலை இளங்காற்று... பிரணிதா சுபாஷ்!

SCROLL FOR NEXT