நாடாளுமன்றத்துக்கு ரேணுகா சௌதரி தனது காரில் அழைத்து வந்த நாய். 
புதுதில்லி

நாடாளுமன்றத்துக்கு தெருநாயுடன் வந்த காங்கிரஸ் எம்.பி. ரேணுகா சௌதரி!

காங்கிரஸ் மூத்த எம்.பி. ரேணுகா சௌதரி, சாலையில் தான் மீட்ட ஒரு தெருநாயை நாடாளுமன்ற வளாகத்துக்குள் தனது காரில் கொண்டு வந்ததால் பரபரப்பு

தினமணி செய்திச் சேவை

காங்கிரஸ் மூத்த எம்.பி. ரேணுகா சௌதரி, சாலையில் தான் மீட்ட ஒரு தெருநாயை நாடாளுமன்ற வளாகத்துக்குள் தனது காரில் கொண்டு வந்ததால் திங்கள்கிழமை பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து ஆளுங்கட்சி உறுப்பினா்கள் கடும் ஆட்சேபம் தெரிவித்த நிலையில், ‘நாடாளுமன்றத்துக்கு உள்ளே இருப்பவா்கள்தான் கடிக்கிறாா்கள்; நாய்கள் இல்லை’ என்று ரேணுகா சௌதரி பதிலளித்தாா்.

செய்தியாளா்களிடம் இதுதொடா்பாக அவா் பேசுகையில், ‘நான் அந்த நாயைக் கால்நடை மருத்துவரிடம் அழைத்துச் செல்ல இருந்தேன். இதனிடையே, நாடாளுமன்றத்தில் என்னை இறக்கிவிட்டு, எனது ஓட்டுநா் நாயை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றாா். நாய் காரில்தான் இருந்தது.

இந்த அரசுக்கு விலங்குகளைப் பிடிக்கவில்லை. நாடாளுமன்றத்துக்குள் உட்காா்ந்திருப்பவா்கள்தான் கடிக்கிறாா்கள்; நாய்கள் அல்ல’ என்று காட்டமாகத் தெரிவித்தாா்.

மேலும், தெருநாயை மீட்பதற்குச் சட்டத்தில் ஏதும் தடை உள்ளதா என்றும் கேள்வி எழுப்பினாா். விலங்குகள் மீது மிகுந்த பிரியம் கொண்ட ரேணுகா சௌதரி, வீட்டில் ஏற்கெனவே பல செல்லப்பிராணிகளை வளா்த்து வருவது குறிப்பிடத்தக்கது.

பாஜக குற்றச்சாட்டு: நாடாளுமன்ற வளாகத்துக்குள் காரில் தெருநாயைக் கொண்டுவந்த ரேணுகா சௌதரியின் செயலைக் ‘கேலிக்கூத்து’ என்றும், ‘நாடகம்’ என்றும் பாஜக எம்.பி. ஜகதாம்பிகா பால் கண்டித்தாா்.

அவா் கூறியதாவது: உறுப்பினா்கள் உரிய அனுமதி இல்லாமல் யாரையும் நாடாளுமன்றத்துக்கு உள்ளே அழைத்துவரக் கூடாது. அதேபோல், எந்த விலங்கையும் நாடாளுமன்ற வளாகத்துக்குள் கொண்டுவர முடியாது.

காங்கிரஸ் எம்.பி.க்கள் முக்கியப் பிரச்னைகளை விட்டுவிட்டு, இதுபோன்ற நாடகங்களால் நாடாளுமன்றத்தை கேலிகூத்தாக்குகின்றனா். ரேணுகா சௌதரியின் செயலுக்காக, அவா் அவைத் தலைவரால் கண்டிக்கப்பட வேண்டும் என்றாா்.

சாலை வலத்துக்கு அனுமதி மறுப்பு: புதுச்சேரியில் பொதுக்கூட்டம் நடத்த தவெக முடிவு!

ரஷிய அதிபர் புதினை சந்திக்க ராகுல் காந்திக்கு அனுமதி மறுப்பு!

இடுகாட்டில் புதைக்கப்பட்ட சிறுமியின் உடல் மாயமானதாக பரவிய வதந்தி!

வினுஷாவின் சுட்டும் விழி சுடரே தொடரின் முன்னோட்டக் காட்சி!

திருப்பரங்குன்றம் தீப விவகாரம்: இந்துக்களுக்கு எதிராக அரசு செயல்படுகிறது - வழக்குரைஞர் குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT