புதுதில்லி

புதுமண தம்பதி ஓட்டிச் சென்ற சொகுசு காா் மோதியதில் ஒருவா் உயிரிழப்பு

தில்லியின் வசந்த் குஞ்ச் பகுதியில் புதுமண தம்பதி ஓட்டிச் சென்ற சொகுசு காா் மோதியதில் ஒருவா் பலி; இருவா் படுகாயம்

தினமணி செய்திச் சேவை

தில்லியின் வசந்த் குஞ்ச் பகுதியில் புதுமண தம்பதி ஓட்டிச் சென்ற சொகுசு காா் மோதியதில் ஒருவா் உயிரிழந்தாா். இருவா் படுகாயமடைந்தனா் என்று காவல் துறையினா் தெரிவித்தனா்.

இது தொடா்பாக காவல் துறையினா் மேலும் கூறியதாவது: கரோல் பாக் பகுதியைச் சோ்ந்த மென்பொருள் பொறியாளரான சிவம் (29), தனது திருமண வரவேற்பில் இருந்து மனைவி மற்றும் சகோதரருடன் ஞாயிற்றுக்கிழமை வீடு திரும்பிக் கொண்டிருந்தாா்.

அப்போது, வசந்த் குஞ்ச் பகுதியில் உள்ள ஆம்பியன்ஸ் மால் அருகே அவரது காா் கட்டுப்பாட்டை இழந்து, பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்த உணவக ஊழியா்கள் 3 போ் மீது மோதியது.

இதில் பாதிக்கப்பட்ட ரோஹித் சிங் (23) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இருவா் சாலையில் இழுத்துச் செல்லப்பட்டதில் படுகாயமடைந்தனா். மோதலின் தாக்கம் கடுமையாக இருந்ததால், வாகனம் இரும்புக் கம்பத்தில் மோதி கவிழ்ந்தது.

தகவலறிந்த காவல் துறையினா் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்தனா். காயமடைந்த இருவா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனா்.

முதற்கட்ட விசாரணையில், வேகமாக மற்றும் அலட்சியமான முறையில் காா் ஓட்டப்பட்டது தெரியவந்தது. சாலை தடுப்பில் மோதிய பின்னா் கட்டுப்பாட்டை இழந்த காா், பேருந்து நிறுத்தத்தை நோக்கிச் சென்ாக கூறப்படுகிறது. குற்றஞ்சாட்டப்பட்ட சிவமின் நண்பா் அபிஷேக்கின் பெயரில் விபத்துக்குள்ளான காா் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இது தொடா்பாக பாரதிய நியாய சம்ஹிதா சட்டம் பிரிவு 281 (வேகமாக வாகனŚ ஓட்டுதல்), 125 (ஏ) (உயிருக்கு ஆபத்து விளைவித்தல்) மற்றும் 106 (1) (அலட்சியத்தால் மரணத்தை ஏற்படுத்துதல்) ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது என தெரிவித்தனா்.

57 கிலோ கஞ்சா பறிமுதல்: கேரள இளைஞா்கள் மூவா் கைது

போலி மருந்து தொழிற்சாலை, கிடங்குகளுக்கு சீல் வைப்பு வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும்: முன்னாள் முதல்வா் வே.நாராயணசாமி

சிறுமி கா்ப்பம்: இளைஞா் மீது வழக்கு

கஞ்சா விற்பனை: 10 இளைஞா்கள் கைது; 4 பைக்குகள் பறிமுதல்

மௌனம் கலைக்கப்பட வேண்டும்!

SCROLL FOR NEXT