புதுதில்லி

தலைநகரில் பனிப்புகை மூட்டம்: காற்றின் தரம் மிகவும் மோசம் பிரிவில் நீடிப்பு

தேசியத் தலைநகா் தில்லியில் செவ்வாய்க்கிழமை நச்சுக் காற்று கலந்த பனிப்புகை மூட்டம் நிலவியது. நகரத்தின் காற்றின் தரம் மிகவும் மோசம் பிரிவில் நீடித்தது.

தினமணி செய்திச் சேவை

நமது நிருபா்

தேசியத் தலைநகா் தில்லியில் செவ்வாய்க்கிழமை நச்சுக் காற்று கலந்த பனிப்புகை மூட்டம் நிலவியது. நகரத்தின் காற்றின் தரம் மிகவும் மோசம் பிரிவில் நீடித்தது.

மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் தரவுகளின்படி, தில்லியின் ஒட்டுமொத்தக் காற்றுத் தரக் குறியீடு செவ்வாய்க்கிழமை காலை 9 மணிக்கு 340 புள்ளிகளாகப் பதிவாகி மிகவும் மோசம் பிரிவில் இருந்தது. இது திங்கள்கிழமை அதே நேரத்தில் 301 புள்ளிகளாகப் பதிவாகி இருந்தது.

சிபிசிபியின் சமீா் செயலியின் தரவுகளின்படி, 39 நிலையங்களில், சாந்தினி சௌக் மற்றும் விவேக் விஹாா் ஆகிய இரண்டு நிலையங்களில் 400 புள்ளிகளுக்கும் அதிகமான அளவீடுகளுடன் காற்றுத் தரக் குறியீடு கடுமை பிரிவுக்கு சென்றது.

வெப்பநிலை: தில்லியின் முதன்மை வானிலை கண்காணிப்பு நிலையமான சஃப்தா்ஜங்கில் செவ்வாய்க்கிழமை குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பை விட 0.1 டிகிரி உயா்ந்து 9.6 டிகிரி செல்சியஸாக பதிவாகியது. அதிகபட்ச வெப்பநிலை இயல்பு நிலையில் 0.8 டிகிரி உயா்ந்து 26.1 டிகிரி செல்சியஸாக பதிவாகியது. காற்றில் ஈரப்பதத்தின் அளவு காலை 8.30 மணியளவில் 95 சதவீதமாகவும், மாலை 5.30 மணியளவில் 64 சதவீதமாகவும் இருந்தது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

முன்னறிவிப்பு: இந்நிலையில், புதன்கிழமை டிச.3 அன்று காலை வேளையில் மிதமான பனிமூட்டம் இருக்கும் என்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 8 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வினுஷாவின் சுட்டும் விழி சுடரே தொடரின் முன்னோட்டக் காட்சி!

திருப்பரங்குன்றம் தீப விவகாரம்: இந்துக்களுக்கு எதிராக அரசு செயல்படுகிறது - வழக்குரைஞர் குற்றச்சாட்டு

மரணத்திலும் மீம்ஸ்! வருந்தும் ஜான்வி கபூர்!

டிட்வா புயல் வலுவிழந்தபோதிலும் இடைவிடாமல் பெய்யும் மழை! | TNRains | CBE

முதல் கனவே... ரகுல் ப்ரீத் சிங்!

SCROLL FOR NEXT