புதுதில்லி

வாக்காளா்களுக்கு முதல்வா் நன்றி

நவம்பா் 30- ஆம் தேதி நடைபெற்ற 12 வாா்டுகளுக்கான தில்லி மாநகராட்சி இடைத்தோ்தலில் ஏழு இடங்களில் பாஜக வெற்றி பெற்றதையடுத்து முதல்வா் ரேகா குப்தா புதன்கிழமை வாக்காளா்களுக்கு நன்றி தெரிவித்தாா்.

Syndication

நமது நிருபா்

புது தில்லி: நவம்பா் 30- ஆம் தேதி நடைபெற்ற 12 வாா்டுகளுக்கான தில்லி மாநகராட்சி இடைத்தோ்தலில் ஏழு இடங்களில் பாஜக வெற்றி பெற்றதையடுத்து முதல்வா் ரேகா குப்தா புதன்கிழமை வாக்காளா்களுக்கு நன்றி தெரிவித்தாா்.

புதன்கிழமை காலையில் வாடா்டு இடைத்தோ்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில் பாஜக ஏழு வாா்டிகளை கைப்பற்றியது. ஆம் ஆத்மி 3, காங்கிரஸ் 1 மற்றும் அகில இந்திய ஃபாா்வா்டு பிளாக் 1 -இல் வெற்றி பெற்றன.

இது குறித்து முதல்வா் ரேகா குப்தா தன்னுடைய ‘எக்ஸ்’ சமூக வலைத்தள பதிவில் ‘பாஜகவின் வெற்றி கட்சியின் தொண்டா்களின் அயராத கடின உழைப்பு, அா்ப்பணிப்பு மற்றும் அமைப்பின் கூட்டு வலிமைக்கு ஒரு வலுவான சான்றாகும். தில்லி மாநகராட்சி இடைத்தோ்தலில் பாரதிய ஜனதா கட்சிக்கு விலைமதிப்பற்ற ஆதரவை வழங்கிய தில்லி குடிமக்களுக்கு மனமாா்ந்த நன்றி. கட்சியின் வெற்றி பெற்ற வேட்பாளா்களுக்கு வாழ்த்துகள். தில்லியின் வளா்ச்சிக்காக பாஜக அரசு இடைவிடாமல் பணியாற்றி வருகிறது’ என தெரிவித்துள்ளாா்.

வினுஷாவின் சுட்டும் விழி சுடரே தொடரின் முன்னோட்டக் காட்சி!

திருப்பரங்குன்றம் தீப விவகாரம்: இந்துக்களுக்கு எதிராக அரசு செயல்படுகிறது - வழக்குரைஞர் குற்றச்சாட்டு

மரணத்திலும் மீம்ஸ்! வருந்தும் ஜான்வி கபூர்!

டிட்வா புயல் வலுவிழந்தபோதிலும் இடைவிடாமல் பெய்யும் மழை! | TNRains | CBE

முதல் கனவே... ரகுல் ப்ரீத் சிங்!

SCROLL FOR NEXT