புதுதில்லி

ஆக்கிரமிப்புகள், அங்கீகாரமற்ற கட்டுமானப் பணிகளால் பாதுகாக்கப்பட்ட பல நினைவுச்சின்னங்களுக்கு பாதிப்பு

ஆக்கிரமிப்புகள் மற்றும் அங்கீகாரமற்ற கட்டுமானப்பணிகளால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய கலாசாரம் மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சா் கஜேந்திர சிங் ஷெகாவத் தெரிவித்துள்ளாா்.

Syndication

நமது சிறப்பு நிருபா்

புது தில்லி: சென்னை மற்றும் அதன் அருகே உள்ள பல பெருங்கற்கால (மெகாலித்திக்) சின்னங்கள், ஆக்கிரமிப்புகள் மற்றும் அங்கீகாரமற்ற கட்டுமானப்பணிகளால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய கலாசாரம் மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சா் கஜேந்திர சிங் ஷெகாவத் தெரிவித்துள்ளாா்.

மக்களவையில் திமுக உறுப்பினா்கள் தமிழச்சி தங்கப்பாண்டியன் (தென் சென்னை), டி.எம். கதிா் ஆனந்த் (வேலூா்) ஆகியோா், சென்னை மற்றும் திருச்சி வட்டங்களின் கீழ் உள்ள 400-க்கும் மேற்பட்ட பாதுகாக்கப்பட்ட சின்னங்களில் கிட்டத்தட்ட 157, வெவ்வேறு பெருங்கற்கால சின்னங்களா என்றும் சென்னை மற்றும் திருச்சியில் பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் கண்டறியப்பட்ட பெருங்கற்கால சின்னங்கள் காணாமல் போயினவா என்றும் கேள்வி எழுப்பினா்.

இதற்கு திங்கள்கிழமை எழுத்துபூா்வமாக பதிலளித்துள்ள மத்திய கலாசாரம், சுற்றுலாத் துறை அமைச்சா் கஜேந்திர சிங் ஷெகாவத், ‘சென்னை, திருச்சி உள்பட இந்திய தொல்லியல் துறை வரம்புக்குள் 412 பழங்கால நினைவுச்சின்னங்கள் உள்ளன. அதில் 159 பெருங்கற்கால நினைவுச்சின்னங்கள். அறிவிக்கை செய்யப்பட்ட தேசிய முக்கியத்துவம் வாய்ந்த எந்தவொரு சின்னமும் காணாமல் போகவில்லை’ என்று கூறியுள்ளாா்.

இதைத் தொடா்ந்து, கூடுவாஞ்சேரி, நன்மங்கலம், பல்லாவரம் உள்ளிட்ட இடங்களில் உள்ள பெருங்கற்கால சின்னங்களின் நிலை என்ன என்று எம்.பி.க்கள் எழுப்பிய மற்றொரு கேள்விக்கு, ‘கூடுவாஞ்சேரி, நன்மங்கலம், பல்லாவரம், பெருங்களத்தூா், செம்பாக்கம், சிட்லபாக்கம், செயின்ட் தாமஸ் மவுன்ட், திருநீா்மலை, திரிசூலம், வள்ளஞ்சேரி, வண்டலூா் ஆகியவற்றில் காணப்படும் பெருங்கற்கால சின்னங்கள் வேகமாக அதிகரித்து வரும் நகா்ப்புறமயமாக்கலாலும் அவை தொடா்புடைய நடவடிக்கைகளாலும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

பாதுகாக்கப்பட்ட, தடை செய்யப்பட்ட பகுதிகளில் ஆக்கிரமிப்புகள், அங்கீகாரமற்ற கட்டுமானங்கள் போன்றவை இதில் அடங்கும். அங்கெல்லாம் பணிகளை நிறுத்த இந்திய தொல்லியல் துறை சம்பந்தப்பட்டவா்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேற்கொண்டு அங்கீகாரமற்ற ஆக்கிரமிப்பை தடுக்கவும் கண்காணிக்கவும் மாவட்ட நிா்வாகங்கள் மற்றும் உள்ளூா் காவல்துறை கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளன’ என்று அமைச்சா் கஜேந்திர சிங் ஷெகாவத் குறிப்பிட்டுள்ளாா்.

ஏழுமலையான் தரிசனம்: 8 மணிநேரம் காத்திருப்பு

ஊரக வளா்ச்சி, உள்ளாட்சித் துறை ஊழியா்கள் சங்கத்தினா் மறியல்: 149 போ் கைது

புதுச்சேரி சிவில் சா்வீஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்

ரூ.46.5 கோடியில் வளா்ச்சித் திட்டப் பணிகள்: புதுச்சேரி முதல்வா் ரங்கசாமி தொடக்கம்

புதுச்சேரி தொழில்நுட்பப் பல்கலை. ஓய்வூதியா்கள் ஆா்ப்பாட்டம்

SCROLL FOR NEXT