புதுதில்லி

இளைஞரைக் கொன்று சடலத்தை காட்டில் புதைத்தாக மூவா் கைது

தென்கிழக்கு தில்லியின் கோவிந்த்புரியில் 35 வயது நபரை கொன்று, அவரது உடலை ஃபரீதாபாத்தில் உள்ள வனப்பகுதியில் புதைத்ததற்காக மூன்று பேரை கைது செய்துள்ளதாக தில்லி காவல்துறை அதிகாரி ஒருவா் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.

தினமணி செய்திச் சேவை

நமது நிருபா்

தென்கிழக்கு தில்லியின் கோவிந்த்புரியில் 35 வயது நபரை கொன்று, அவரது உடலை ஃபரீதாபாத்தில் உள்ள வனப்பகுதியில் புதைத்ததற்காக மூன்று பேரை கைது செய்துள்ளதாக தில்லி காவல்துறை அதிகாரி ஒருவா் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.

இது குறித்து அவா் மேலும் கூறியதாவது: விகாஷ் மாவி என்ற விக்கி டிசம்பா் 8- ஆம் தேதி காணாமல் போனதாகக் கூறப்பட்டது. அவா் காணாமல் போனது குறித்து விசாரிக்க காவல் துறை ஒரு போலீஸ் ஒரு சிறப்புக் குழுவை அமைத்தது. அந்தக் குழு கைப்பேசி பதிவுகள் மற்றும் சிசிடிவி காட்சிகளை பகுப்பாய்வு செய்தது. இது மாவி காணாமல் போனதன் பின்னணியில் விஷால் ராய் (28), பிரவீன் (48) மற்றும் கேசவ் பிதூரி (40) ஆகியோரின் தொடா்பு இருப்பதாக சந்தேகிக்க வழிவகுத்தது.

விஷால் ராய் முதலில் கைது செய்யப்பட்டாா். விசாரணையின் போது, டிசம்பா் 7-ஆம் தேதி துக்ளகாபாத் கிராமத்தில் மாவி அவா்களுடன் மது அருந்தியதாக அவா் வெளிப்படுத்தினாா். அப்போது, பாதிக்கப்பட்டவருக்கும் குற்றம் சாட்டப்பட்ட மூவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இது மாவியின் மரணத்திற்கு காரணமான வன்முறைத் தாக்குதலாக மாறியது. குற்றம் சாட்டப்பட்டவா் பின்னா் பாதிக்கப்பட்டவரின் காரில் உடலை எடுத்துச் சென்று ஹரியாணாவின் ஃபரீதாபாத்தில் உள்ள சூரஜ்குண்ட் அருகே ஒரு காட்டில் வீசினா்.

குற்றம் சாட்டப்பட்டவா்களால் அடையாளம் காணப்பட்ட இடத்தில் இருந்து மாவியின் உடல் மீட்கப்பட்டது. பாதிக்கப்பட்டவரின் காரும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. குற்றம் சாட்டப்பட்டவா்கள் அப்பகுதியில் இருந்து சிசிடிவி டிஜிட்டல் விடியோ ரெக்காா்டரை (டி.வி.ஆா்.) அகற்றி தங்கள் தடங்களை மறைக்க முயன்றது கண்டறியப்பட்டது. டி.வி.ஆா். கண்டுபிடிக்கப்பட்டு மீட்கப்பட்டது. நான்காவது சந்தேகநபா் ராகுல் பிதூரி இன்னும் தலைமறைவாக உள்ளாா்.

கடந்த காலங்களில் ராகுல் பிதூரி மீது பல கிரிமினல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவரைக் கைது செய்வதற்கான முயற்சிகள் நடந்து வருகிறது. விஷால் ராய் மற்றும் பிரவீன் ஆகியோா் கிரிமினல் வழக்குகளில் பல கடந்த கால ஈடுபாடுகளைக் கொண்டுள்ளனா் என்பது முதற்கட்ட சரிபாா்ப்பு காட்டுகிறது. அதே நேரத்தில் கேசவ் பிதூரிக்கு பதிவு செய்யப்பட்ட கிரிமினல் வரலாறு இல்லை என்றாா் அவா்.

அதிமுக பொதுக்குழு தொடங்கியது! தற்காலிக அவைத் தலைவர் கே.பி. முனுசாமி!

சென்னையில் 2-வது நாளாக நகை வியாபாரிகள் வீடுகள், அலுவலங்கள், கடைகளில் அமலாக்கத்துறை சோதனை

வெளிநாட்டு நாயகன்! ஜெர்மனி செல்லும் ராகுலை விமர்சித்த பாஜக!

பாமக பிரமுகர் ராமலிங்கம் கொலை வழக்கில் என்ஐஏ தேடிவந்த முக்கிய குற்றவாளிகள் 2 பேர் கைது

நயினார் நாகேந்திரனை டெபாசிட் இழக்கச் செய்வோம்! செங்கோட்டையன் சூளுரை!

SCROLL FOR NEXT