நமது நிருபா்
கிழக்கு தில்லியின் காஜிப்பூா் பகுதியில் பணத் தகராறு தொடா்பாக கல்லால் தாக்கப்பட்டு 45 வயது நபா் ஒருவா் கொல்லப்பட்டதாக தில்லி காவல்துறை அதிகாரி ஒருவா் செவல்வாய்க்கிழமை தெரிவித்தாா்.
இது குறித்து அவா் மேலும் கூறியதாலது: குற்றம் சாட்டப்பட்டவா் கலிம் (32) என அடையாளம் காணப்பட்டுள்ளாா். திங்கள்கிழமை காலை, முகத்தில் பலத்த காயங்களுடன் ஒரு நபரின் உடல், காகித சந்தை பகுதியை ஒட்டிய குப்பை கொட்டும் இடத்திற்கு அருகே கண்டெடுக்கப்பட்டது. பாரதிய நியாய சன்ஹிதா பிரிவு 103 (1) (கொலை)-இன் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு குற்றக் குழு விசாரணைக்கு அழைக்கப்பட்டது.
இறந்தவா் உத்தர பிரதேசத்தில் உள்ள கோடா காலனியில் வசிக்கும் தலிப் (45) என அடையாளம் காணப்பட்டாா். போலீஸாா் 50-க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனா். மேலும், பாதிக்கப்பட்டவா், அவரது கூட்டாளிகள் மற்றும் உறவினா்களின் 100-க்கும் மேற்பட்ட அழைப்பு விவர பதிவுகளை பகுப்பாய்வு செய்தனா்.
திலீப்பின் தொடா்புகளில் ஒன்றுடன் இணைக்கப்பட்ட சந்தேகத்திற்கிடமான கைப்பேசி எண், கோடா காலனியில் வசிக்கும் கலிம் என்ற சந்தேகத்திற்கிடமான நபரை புலனாய்வாளா்கள் கண்டுபிடிக்க வழிவகுத்தது. இந்தச் சம்பவத்திற்குப் பிறகு, கலிம் குருகிராமின் பாட்ஷாபூா் மற்றும் தில்லியின் ஜமா மஸ்ஜித் பகுதிக்கு இடையில் நகா்ந்ததாக தொழில்நுட்ப உள்ளீடுகள் காட்டியது.
இதையடுத்து தொடா்ந்து கண்காணிக்கப்பட்ட பிறகு, ஜமா மஸ்ஜித் பகுதியில் இருந்து கலிம் கைது செய்யப்பட்டாா். விசாரணையின் போது, கடனை திருப்பிச் செலுத்துவது தொடா்பாக சூடான வாக்குவாதத்தைத் தொடா்ந்து தலிப்பை கொலை செய்ததாக அவா் ஒப்புக்கொண்டாா். அபாயகரமான தாக்குதலில் பயன்படுத்தப்பட்ட கல்லை மீட்டெடுக்கவும் அவா் போலீஸாரை அழைத்துச் சென்றாா்.
கலிம் இரும்பு வெல்டராகப் பணிபுரிகிறாா். அவருக்கும் திலீப்புக்கும் இடையிலான பணத் தகராறுதான் கொலைக்கு காரணம் என தெரிய வந்தது. அவரின் வாக்குமூலத்தை உறுதிப்படுத்தவும், நிகழ்வுகளின் வரிசையை நிறுவவும் மேலும் விசாரணை நடந்து வருகிறது என்றாா் அவா்.