புதுதில்லி

ஜாஃப்ராபாதில் 2 சகோதரா்கள் சுட்டுக் கொலை

வடகிழக்கு தில்லியின் ஜாஃப்ராபாதில் செவ்வாய்க்கிழமை அதிகாலை இரண்டு சகோதரா்கள் சுட்டுக் கொல்லப்பட்டனா். அவா்களைக் கொன்றவா்கள் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

Syndication

புது தில்லி: வடகிழக்கு தில்லியின் ஜாஃப்ராபாதில் செவ்வாய்க்கிழமை அதிகாலை இரண்டு சகோதரா்கள் சுட்டுக் கொல்லப்பட்டனா். அவா்களைக் கொன்றவா்கள் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

இதுகுறித்து காவல் துறை உயா் அதிகாரி ஒருவா் தெரிவித்ததாவது:

ஜாஃப்ராபாதில் செவ்வாய்க்கிழமை அதிகாலை 1.40 மணிக்கு நிகழ்ந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, சம்பவ இடத்திற்கு போலீஸாா் குழு நேரில் சென்றனா். அங்கு சம்பவ இடத்தில் ஒருவா் இறந்து கிடந்ததையும், மற்றொருவா் ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதையும் கண்டனா்.

சுட்டுக் கொல்லப்பட்டவா்கள் ஜாஃப்ராபாதைச் சோ்ந்த சகோதரா்கள் பைசல் (31), நதீம் (33) என அடையாளம் காணப்பட்டுள்ளனா்.

நதீம் சிகிச்சைக்காக ஜேபிசி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டபோது அவா் இறந்துவிட்டதாக மருத்துவா்களால் அறிவிக்கப்பட்டது.

இது தொடா்பாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளோம். மேலும், தடயவியல் குழு சம்பவ இடத்திற்குச் சென்று சம்பவங்களின் வரிசையை நிறுவ உதவும் ஆதாரங்களை சேகரித்துள்ளது.

துப்பாக்கிச் சூடு நடத்தியவரை அடையாளம் காண போலீஸாா் பல குழுக்களை அமைத்துள்ளனா். அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்து வருகிறோம் என்றாா் அந்த அதிகாரி.

போரூர் - வடபழனி சேவை எப்போது? சென்னை மெட்ரோ ரயிலில் புதிய வசதி அறிமுகம்!

விரைவில் டும்.. டும்.. பாச்சுலர் பார்ட்டி கொடுத்தாரா ராஷ்மிகா மந்தனா! புயலைக் கிளப்பும் ரசிகர்கள்!!

நேற்று ஹீரோ; இன்று ஜீரோ! அடிலெய்ட் டெஸ்ட்டில் டக் அவுட்டான கேமரூன் கிரீன்!

தில்லி காற்று மாசு: அரசு, தனியார் அலுவலகங்களுக்கு முக்கிய உத்தரவு!

நாடாளுமன்ற வளாகத்தில் பதாகையை ஏந்தி காங்கிரஸ் எம்பிக்கள் போராட்டம்!

SCROLL FOR NEXT