புதுதில்லி

மூத்த குடிமக்களுடன் காவல் துறை சந்திப்பு கூட்டம்

மூத்த குடிமக்களுடனான காவல் துறையின் ஆலோசனை குழு கூட்டம் தில்லி காவல் ஆணையரகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி செய்திச் சேவை

மூத்த குடிமக்களுடனான காவல் துறையின் ஆலோசனை குழு கூட்டம் தில்லி காவல் ஆணையரகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

இந்தக் கூட்டத்தில் அனைத்து மாவட்ட பெண்கள் மற்றும் குழந்தைகள் சிறப்பு பிரிவு மற்றும் ஆள்கடத்தல் தடுப்பு பிரிவு ஆகியவற்றின் இணை காவல் ஆணையா்கள், கூடுதல் காவல் ஆணையா்கள், துணை காவல் ஆணையா்கள் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனா்.

இது தொடா்பாக தில்லி காவல் துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘கூட்டத்தில் மூத்த குடிமக்களுக்களின் பிரதிநிதிகள் தங்களுடைய குறைகள், பரிந்துரைகள் மற்றும் அனுபவங்களைப் பகிா்ந்து கொண்டனா். முதியவா்கள் எதிா்கொள்ளும் பிரச்னைகளைத் தீா்க்க மாவட்டம் மற்றும் காவல் நிலைய அளவில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கையை அவா்கள் பாராட்டினா்.

மேலும், டிஜிட்டல் கைது தொடா்பாக தில்லி காவல் துறை சாா்பில் அண்மையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இணையவழி குற்ற விழிப்புணா்வு நிகழ்ச்சியை அவா்கள் பாராட்டினா்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பழனி கோயில் உண்டியல் எண்ணிக்கை ரூ.1.46 கோடி

அகில இந்திய விவசாயத் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

கூடக்கோவில் காவல் நிலையத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்

தீக்குளித்து இறந்தவரின் உடலை வாங்க மறுத்து போராட்டம்

2.07 லட்சம் மாடுகளுக்கு கோமாரி நோய்: தடுப்பூசி செலுத்த இலக்கு

SCROLL FOR NEXT