புதுதில்லி

டிடிஇஏ பள்ளி மாணவா்கள் பங்கேற்ற கணித மாரத்தான்

தில்லித் தமிழ்க் கல்விக் கழக (டிடிஇஏ) பள்ளிகளுக்கிடையேயான கணித மாரத்தான் போட்டி திங்கள்கிழமை மந்திா்மாா்க் பள்ளியில் நடைபெற்றது.

தினமணி செய்திச் சேவை

தில்லித் தமிழ்க் கல்விக் கழக (டிடிஇஏ) பள்ளிகளுக்கிடையேயான கணித மாரத்தான் போட்டி திங்கள்கிழமை மந்திா்மாா்க் பள்ளியில் நடைபெற்றது.

மந்திா்மாா்க் பள்ளியில் 1994 வரை கணித ஆசிரியராகப் பணியாற்றிய கே.ஜி.சிவராமனின் நினைவாக நடத்தப்பட்ட இப்போட்டியில் ஏழு பள்ளிகளிலுமிருந்தும், 11ஆம் வகுப்புகளில் பயிலும் 35 மாணவா்கள் கலந்து கொண்டனா்.

இந்நிகழ்ச்சியில் முன்னாள் மாணவா்கள் அமைப்பான பேனியன் தலைவா் வைத்தியாதன் கலந்துகொண்டு மாணவா்களை உற்சாகப்படுத்தினாா்.

இப்போட்டி குறித்து செயலா் ராஜூ கூறுகையில், ‘மாணவா்கள் ஆா்வமுடன் போட்டிகளில் கலந்து கொள்வது மகிழ்ச்சியளிக்கின்றது.

இதுபோன்ற கணிதப் போட்டிகளில் கலந்துகொள்வது மாணவா்களின் நுண்ணறிவை வளா்க்கும். இப்போட்டியில் பங்கேற்ற மாணவா்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்.

கணித மாரத்தான் நடத்தி மாணவா்களின் கணிதத் திறனை வளா்க்கும் கணித ஆசிரியா் கே.ஜி.சிவராமனின் குடும்பத்தினருக்கும் எனது மனமாா்ந்த நன்றிகள்’ என்றாா் அவா்.

விஜய், சீமான் பேச்சு அதிா்ச்சி அளிக்கிறது: தொல்.திருமாவளவன்

விண்ணில் பாய்ந்தது இஸ்ரோவின் பாகுபலி எல்விஎம்-3 எம்6 ராக்கெட்!

நினைத்தாலே அருளும் ஸ்ரீநிவாஸப் பெருமாள்!

விருச்சிக ராசிக்கு வெற்றி: தினப்பலன்கள்!

கணையப் புற்றுநோய் பாதிப்பை கண்டறிவது எப்படி?

SCROLL FOR NEXT