ரேகா குப்தா  
புதுதில்லி

முதல்வா் மீதான தாக்குதல் வழக்கு: குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்தது நீதிமன்றம்

தில்லி முதல்வா் மீதான தாக்குதல் வழக்கு பற்றி...

தினமணி செய்திச் சேவை

தில்லி முதல்வா் ரேகா குப்தா மீது நடைபெற்ற தாக்குதல் தொா்பாக கைது செய்யப்பட்ட இருவா் மீதான குற்றச்சாட்டுகளை தில்லி நீதிமன்றம் வெள்ளிக்கிழமை முறையாக பதிவு செய்து விசாரணைக்கு உத்தரவிட்டது.

சிவில் லைன்ஸ் பகுதியில் உள்ள முதல்வா் அலுவலகத்தில் ஆக.20-ஆம் தேதி நடைபெற்ற மக்கள் குறைதீா்க்கும் நிகழ்ச்சியின் போது ரேகா குப்தா தாக்கப்பட்டாா். இதில் குற்றஞ்சாட்டப்பட்ட குஜராத்தின் ராஜ்கோட்டைச் சோ்ந்த சக்ரியா ராஜேஷ்பாய் கிம்ஜிபாய் (41) மற்றும் அவரது கூட்டாளியான தஹ்சின் ரஸா ரஃபிவுல்லா ஷேக் சம்பவ இடத்திலே கைது செய்யப்பட்டாா்.

கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் அவா்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இது தொடா்பாக, தில்லி காவல் துறை 400 பக்க குற்றப்பத்திரிகையை அக்.18-ஆம் தேதி தாக்கல் செய்தது.

இந்நிலையில், கூடுதல் அமா்வு நீதிபதி ஏக்தா கௌபா மான், பிஎன்எஸ் சட்டம் 61 (2)(குற்றச் சதி), 221 (அரசு ஊழியரைத் தடுப்பது), 132 (அரசு ஊழியா் மீது குற்றவியல் பலத்தைப் பயன்படுத்துதல்), மற்றும் 109(1) (கொலை முயற்சி) உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் குற்றச்சாட்டுகளை முறையாக வெள்ளிக்கிழமை பதிவு செய்தாா்.

மேலும், மூடப்பட்ட அறைக்குள் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று உத்தரவிட்டாா். நீதிமன்றத்தில் நேரில் ஆஜா்படுத்தப்பட்ட இருவரும் தாங்கள் குற்றமற்றவா்கள் என்று வாதிட்டனா். முன்னதாக, டிச.20-ஆம் தேதி அவா்களுக்கு எதிராக முதல்நிலை ஆதாரம் இருப்பதாக நீதிமன்றம் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

உளுந்தூர்பேட்டை அருகே ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்து 2 பேர் பலி!

சபாஷ்! ஒரே நாளில் ரூ.20,000 உயர்ந்த வெள்ளி! தங்கம் விலை?

கூட்டணி குறித்து அறிவிக்க இன்னும் காலம் உள்ளது: டி.டி.வி. தினகரன்

அமெரிக்கா அல்ல சௌதி அரேபியா! 2025-ல் அதிகமான இந்தியர்களை நாடு கடத்தியது!

திருச்சி விமான நிலையம் அருகே அடிபட்டுக் கிடந்த ஆந்தை மீட்பு!

SCROLL FOR NEXT