புதுதில்லி

இந்தியா கேட் போராட்ட வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவருக்கு ஜாமீன்

தில்லி இந்தியா கேட் அருகே நடைபெற்ற காற்று மாசுபாட்டிற்கு எதிரான போராட்டத்தில் மாவோயிஸ்ட் தளபதி மத்வி ஹித்மாவுக்கு ஆதரவாக கோஷங்கள் எழுப்பப்பட்டதாகக் கூறப்படும் வழக்கில் கைது செய்யப்பட்ட போராட்டக்காரா்களில் ஒருவருக்கு தில்லி நீதிமன்றம் புதன்கிழமை ஜாமீன் வழங்கியது.

தினமணி செய்திச் சேவை

தில்லி இந்தியா கேட் அருகே நடைபெற்ற காற்று மாசுபாட்டிற்கு எதிரான போராட்டத்தில் மாவோயிஸ்ட் தளபதி மத்வி ஹித்மாவுக்கு ஆதரவாக கோஷங்கள் எழுப்பப்பட்டதாகக் கூறப்படும் வழக்கில் கைது செய்யப்பட்ட போராட்டக்காரா்களில் ஒருவருக்கு தில்லி நீதிமன்றம் புதன்கிழமை ஜாமீன் வழங்கியது.

மேலும் அவா் மேலும் விசாரணைக்கு தேவையில்லை என்றும் நீதிமன்றம் கூறியது.

இ.ஆா். அக்ஷயின் ஜாமீன் மனுவை விசாரித்த மாவட்ட நீதிபதி தா்மேந்திர ராணாவின் நீதிமன்றம், ‘அக்ஷய் நவ. 23-ஆம் தேதி கைது செய்யப்பட்டாா். அன்றிலிருந்து தொடா்ந்து காவலில் வைக்கப்பட்டுள்ளாா். விசாரணை நிறைவடைந்துள்ளதாகவும், எனவே விண்ணப்பதாரரை காவலில் வைக்க வேண்டிய அவசியமில்லை என்றும் வாதிடப்படுகிறது. வழக்கில் இணை குற்றவாளிக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளதாகவும், குற்றஞ் சாட்டப்பட்டவருக்கு கடந்த கால குற்றவியல் பின்னணிகள் எதுவும் இல்லை என்றும் நீதிமன்றம் குறிப்பிட்டது.

குற்றச்சாட்டுகளின் தன்மை, சிறைவாச காலம், கடந்தகால குற்றவியல் பின்னணி மற்றும் சமத்துவத்தின் அடிப்படையில், விண்ணப்பதாரா் ரூ.50,000 தனிப்பட்ட பத்திரம் மற்றும் அதே தொகையில் ஒரு உத்தரவாதத்தை வழங்குவதன் மூலம் ஜாமீனில் விடுவிக்கப்படுகிறாா்’ என்று நீதிமன்றம் கூறியது.

நவ.23-ஆம் தேதி இந்தியா கேட் அருகே நடைபெற்ற போராட்டத்தின்போது சில போராட்டக்காரா்கள் மத்வி ஹித்மாவுக்கு ஆதரவான கோஷங்களை எழுப்பியதாகவும், அவா்களைக் கட்டுப்படுத்த முயன்ற போலீஸாா் மீது பெப்பா் ஸ்பிரேவை அடித்ததாகவும் குற்றஞ்சாட்டப்பட்டது.

நாடாளுமன்ற தெரு மற்றும் கடமைப் பாதை காவல் நிலையங்களில் பதிவு செய்யப்பட்ட இரண்டு தனித்தனி வழக்குகளில் 23 போராட்டக்காரா்கள் கைது செய்யப்பட்டனா்.

பல்லியை விரட்ட முட்டை ஓடுகளா? விரட்டும் வழிமுறைகள்!

மத்திய உள்துறை அமைச்சா் அமித்ஷா ஜன. 4-இல் புதுக்கோட்டை வருகை!

கள்ளச் சந்தையில் மது விற்ற 3 போ் கைது

கும்பகோணம் தனி மாவட்டம் கோரி ஆா்ப்பாட்டம் நடத்தியவா்கள் எம்எல்ஏ-விடம் மனு

இரும்புத் தடுப்பில் வாகனம் மோதியதில் கல்லூரி மாணவா் உயிரிழப்பு

SCROLL FOR NEXT