காங்கிரஸ் வாக்குறுதி  INC
புதுதில்லி

தில்லியில் வென்றால் ரூ. 25 லட்சம் மருத்துவக் காப்பீடு: காங்கிரஸ் வாக்குறுதி!

தில்லி சட்டப்பேரவைத் தேர்தல் காங்கிரஸ் வாக்குறுதி பற்றி...

DIN

தில்லியில் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைத்தால் ரூ. 25 லட்சம் மருத்துவக் காப்பீடு வழங்கப்படும் என்று காங்கிரஸ் வாக்குறுதி அளித்துள்ளது.

தில்லி சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் புதன்கிழமை அறிவித்தது.

இந்த நிலையில், ஜீவன் ரக்ஷா யோஜனா என்ற பெயரில் ரூ. 25 லட்சம் மருத்துவக் காப்பீடு வழங்கப்படும் என்று காங்கிரஸ் கட்சி வாக்குறுதி அளித்துள்ளது.

இந்த வாக்குறுதி குறித்து ராஜஸ்தான் முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான அசோக் கெலாட் பேசியதாவது:

“ஜீவன் ரக்ஷா யோஜனா திட்டத்தின் கீழ், ரூ.25 லட்சம் வரையிலான மருத்துவக் காப்பீடு கிடைக்கும். ராஜஸ்தானில் இதேபோன்ற திட்டத்தை நாங்கள் தொடங்கினோம், இதன் கீழ் மக்களுக்கு ரூ.25 லட்சம் வரை இலவச சிகிச்சை அளிக்கப்பட்டது.

ராஜஸ்தானில் 'சுகாதார உரிமை' சட்டத்தை நாங்கள் இயற்றினோம். மக்களுக்கு உரிமைகள் வழங்கப்பட்டன, மேலும் இந்த சட்டம் அனைத்து மருத்துவமனைகளிலும் செயல்படுத்தப்பட்டது.

ராஜஸ்தானில் இது ஒரு புரட்சிகரமான திட்டமாக அமைந்தது. ஜீவன் ரக்ஷா யோஜனா தில்லிக்கு ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் திட்டமாக இருக்கும்” எனத் தெரிவித்தார்.

முன்னதாக, பியாரி திதி யோஜனா என்ற திட்டத்தை அறிமுகப்படுத்திய காங்கிரஸ், ஆட்சிக்கு வந்தால் மாதம் ரூ. 2,500 பெண்களுக்கு வழங்கப்படும் என்று வாக்குறுதி அளித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மாநகராட்சிப் பகுதியில் குவிந்துள்ள குப்பைகளால் நோய் பரவும் அபாயம்

அரசுப் பேருந்து, காா்களை சேதப்படுத்தியதாக 7 போ் கைது

ஜி.கே. உலகப் பள்ளியில் பேட்மிண்டன் அகாதெமி திறப்பு

வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்: மேற்கு வங்கத்தில் மேலும் இருவா் தற்கொலை

பா்கூா் மலையில் மஞ்சள் தோட்டத்துக்குள் கஞ்சா செடிகள் வளா்த்த விவசாயி கைது

SCROLL FOR NEXT