தில்லி சர்வதே விமான நிலையத்தின் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாடு மையத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் தலைநகர் தில்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம் நாளொன்றுக்கு 1,500-க்கும் மேற்பட்ட விமானங்களின் வருகைகள் மற்றும் புறப்பாடுகளை கையாண்டு வருகின்றது.
இந்த நிலையில், விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாடு மையத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டுள்ளதாக தில்லி விமான நிலைய நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:
”விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு (ஏடிசி - ATC) அமைப்பில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் விமான சேவைகளில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
இதை விரைவில் தீர்க்க விமான நிலைய நிர்வாகம் உட்பட அனைத்து தரப்பினரும் தீவிரமாகப் பணியாற்றி வருகிறது. விமானப் பயணிகள் அந்தந்த விமான நிறுவனங்களுடன் தொடர்பில் இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். பயணிகளுக்கு ஏற்பட்டிருக்கும் சிரமத்திற்கு வருந்துகிறோம்.” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.