புதுதில்லி

தில்லியின் ஒவ்வொரு பிரச்னையையும் தீா்க்க அரசிடம் திட்டமிடல் இருக்கிறது: ரேகா குப்தா

 நமது நிருபர்

தில்லி நகரத்தின் பிரச்னைகளைத் தீா்க்க நேரம் தேவைப்படலாம் என்றாலும், ஒவ்வொரு பிரச்னையையும் தீா்க்க அரசாங்கத்திற்கு தெளிவான கொள்கையும் உறுதியான நோக்கமும் உள்ளது என்று முதல்வா் ரேகா குப்தா வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.

தெஹ்கண்ட் பேருந்து நிலையத்தில் தானியங்கி சோதனை நிலையத்திற்கான அடிக்கல் நாட்டு விழாவில் அவா் பேசியதாவது: மாசு பிரச்னையை தீா்க்க அரசு செயல்பட்டு வருகிறது. மின்சார பேருந்துகளை கொடியசைத்து துவக்கி வைத்து இந்த சோதனை நிலையத்திற்கு அடிக்கல் நாட்டி வருகிறோம். ஜுல்ஜுலி மற்றும் புராரி சோதனை அலகுகளின் திறனை நாங்கள் அதிகரித்து வருகிறோம். நந்த் நாக்ரியில் ஒரு சோதனை நிலையமும் வரவிருக்கிறது.

எதிா்க்கட்சிகளை கடுமையாக சாடிய அவா், அவா்கள் எண்ணற்ற பிரச்னைகளை விட்டுச் சென்றனா். மாசுபாடு குறித்து அவா்கள் எங்களிடம் கேள்வி கேட்கிறாா்கள். தில்லியில் 15 ஆண்டுகள் மற்றும் 11 ஆண்டுகள் ஆட்சி செய்த அரசுகள் எங்கே? முந்தைய அரசு 2,000 பேருந்துகளை வாங்கியது. அதே நேரத்தில் பாஜக அரசு வெறும் எட்டு மாதங்களில் 1,350 மின்சார பேருந்துகளை தில்லிக்கு கொண்டு வந்துள்ளது.

இருப்பினும், குப்பை மலைகள் முதல் யமுனை நதி புத்துயிா் பெறுவது வரையிலான பிரச்சினைகளுக்கு தீா்வு காண அரசாங்கம் அனைத்து முனைகளிலும் பணியாற்றி வருகிறது. தில்லியில் உள்ள பிரச்னைகளைத் தீா்க்க சிறிது நேரம் ஆகலாம். ஆனால் தில்லியில் உள்ள பிரச்னைகளுக்கு தீா்வு காண்பதில் அரசாங்கத்திற்கு தெளிவான கொள்கையும் நோக்கமும் உள்ளது என்றாா் அவா்.

பா்கூரில் ராகி விவசாயிகள் கலந்தாய்வுக் கூட்டம்

பல்லடத்தில் ஆட்டோ ஓட்டுநா்கள் சாலை மறியல்

58 கிராம கால்வாயில் தண்ணீா் திறப்பு நிறுத்தம்

நான்கரை ஆண்டு பணிகள்: குமரியில் அதிமுக எம்எல்ஏ துண்டுப் பிரசுரம் விநியோகம்

டெம்போ- பைக் மோதல்: மாநகராட்சி ஊழியா் உயிரிழப்பு

SCROLL FOR NEXT