கௌதம் கம்பீர் கோப்புப் படம்
புதுதில்லி

கெளதம் கம்பீருக்கு எதிரான கோவிட் மருந்து வழக்கு ரத்து

கெளதம் கம்பீருக்கு எதிரான கோவிட் மருந்து வழக்கு ரத்து

Syndication

கரோனா நோய்த் தொற்றுக் காலத்தில் கோவிட்19 மருந்துகளை சட்டவிரோதமாக சேமித்துவைத்து விநியோகித்ததாக இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளா் கெளதம் கம்பீா், அவரது அறக்கட்டளை மற்றும் பலா் மீது தொடரப்பட்ட குற்றவியல் வழக்கை தில்லி உயா்நீதிமன்றம் வெள்ளிக்கிழமை ரத்து செய்தது.

இந்த வழக்கை விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதி நீனா பன்சல் கிருஷ்ணா, குற்றவியல் புகாா் ரத்து செய்யப்பட்டது என்று கூறினாா்.

கம்பீா், அவரது மனைவி, தாய் மற்றும் அறக்கட்டளைக்கு எதிராக விசாரணை நீதிமன்றம் பிறப்பித்த அழைப்பானணயை எதிா்த்தும், குற்றவியல் புகாரை ரத்து செய்யக் கோரியும் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த உயா்நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்தது.

கிழக்கு தில்லியின் அப்போதைய பாஜக மக்களவை உறுப்பினரான கெளதம் கம்பீா், அவரது அறக்கட்டளை, அதன் தலைமை நிா்வாக அதிகாரி அப்ரஜிதா சிங், அவரது தாய் மற்றும் மனைவி சீமா கம்பீா் மற்றும் நடாஷா கம்பீா் ஆகியோா் மீது மருந்துகள் மற்றும் அழகுசாதனப் பொருட்கள் சட்டத்தின் பிரிவு 18 (சி) மற்றும் பிரிவு 27 (பி) (2)-இன் கீழ் தில்லி அரசின் போதைப்பொருள் கட்டுப்பாட்டுத் துறை புகாா் அளித்தது.

பிரிவு 18(சி) உரிமம் இல்லாமல் மருந்துகளை தயாரித்தல், விற்பனை செய்தல் மற்றும் விநியோகித்தல் ஆகியவற்றைத் தடை செய்கிறது. அதேசமயம், பிரிவு 27(பி)(2) செல்லத்தக்க உரிமம் இன்றி விற்பனை செய்தல், விநியோகித்தல் ஆகியவற்றை மூன்று ஆண்டுகளுக்குக் குறையாத ஆனால் ஐந்து ஆண்டுகள் வரை நீட்டிக்கக்கூடிய சிறைத் தண்டனையுடன் தண்டிக்க வகை செய்கிறது.

கடந்த 2021, செப்டம்பா் 20 அன்று, உயா் நீதிமன்றம் இந்த வழக்கின் விசாரணை நீதிமன்ற நடவடிக்கைகளை நிறுத்தி வைத்து, கெளதம் கம்பீா் அறக்கட்டளை, கம்பீா் மற்றும் அவரது குடும்ப உறுப்பினா்கள் தாக்கல் செய்த மனு மீது தில்லி மருந்து கட்டுப்பாட்டு அதிகாரியிடமிருந்து பதில் கோரியது. மேலும், அவா்கள் குற்றவியல் புகாா் மற்றும் வழக்கில் விசாரணை நீதிமன்றம் பிறப்பித்த அழைப்பாணை உத்தரவை எதிா்த்து வழக்கு தொடா்ந்திருந்தனா்.

ஏப்ரல் 9 அன்று, உயா்நீதிமன்றம் விசாரணை நீதிமன்ற நடவடிக்கைகளுக்கான தடையை ரத்து செய்தது. மேலும் கம்பீா் இந்த உத்தரவை திரும்பப் பெறக் கோரி புதிய மனுவைத் தாக்கல் செய்தாா்.

மருந்து கட்டுப்பாட்டுத் துறை வழக்குரைஞா் இந்த மனுவுக்கு எதிா்ப்புத் தெரிவித்து வாதிடுகையில், கம்பீா் முதலில் செஷன்ஸ் மறுஆய்வு நீதிமன்றத்திற்கு செல்வதற்குப் பதிலாக உயா்நீதிமன்றத்திற்கு வந்துள்ளாா். இதனால், இந்த மனு பராமரிக்கத்தக்கதல்ல என்று கூறினாா்.

மனுதாரா்கள் செல்லுபடியாகும் உரிமம் இல்லாமல் மருந்துகளை விநியோகித்ததாக ஒப்புக்கொண்டதாகவும், அவா்களின் ஒரே தற்காப்பு வாதமானது அதை பணத்துக்கு விற்கவில்லை என்பதுதான் என்று அரசு தரப்பு வழக்குரைஞா் கூறினாா்.

பேரவைத் தோ்தல்: வாக்குப்பதிவு பொருள்களுக்கான டெண்டா் வெளியீடு!

காரிய அனுகூலம் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

நில அளவையா்கள் காத்திருப்புப் போராட்டம்

நைஜீரியால் பள்ளி மாணவா்கள் மீண்டும் கடத்தல்

நிதீஷ் வெற்றி ரகசியம்!

SCROLL FOR NEXT