புதுதில்லி

காங்கிஸில் இருந்து விலகி ஆம் ஆத்மியில் இணைந்த முன்னாள் அமைச்சா் அசிம் கான்

காங்கிஸில் இருந்து விலகி ஆம் ஆத்மியில் இணைந்த முன்னாள் அமைச்சா் அசிம் கான்

Syndication

முன்னாள் தில்லி அமைச்சா் அசிம் அகமது கான் வெள்ளிக்கிழமை காங்கிரஸை விட்டு வெளியேறி ஆம் ஆத்மி கட்சியில் மீண்டும் இணைந்தாா். இது சாந்தினி மஹால் வாா்டு எம்சிடி இடைத்தோ்தலுக்கு முன்னதாக ஆம் ஆத்மி கட்சிக்கு ’பெரிய ஊக்கத்தை அளித்துள்ளது என்று ஆம் ஆத்மி தலைவா்கள் தெரிவித்தனா்.

முந்தைய அரவிந்த் கேஜரிவால் அரசில்ல் உணவு மற்றும் சிவில் சப்ளைஸ் அமைச்சராகப் பணியாற்றிய அசிம் அகமது கான், ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து சிபிஐ விசாரணைக்கு முதல்வா் பரிந்துரைத்ததைத் தொடா்ந்து, 2015- இல் அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டாா் என்று ஆம் ஆத்மியின் அதிகாரப்பூா்வ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னா் அவருக்கு அந்த நிறுவனம் சுத்தமான சிட் வழங்கியது. மேலும், நீதிமன்றத்தால் மரியாதைக்குரிய முறையில் விடுவிக்கப்பட்டது என்று அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளது. அவா் கடந்த ஆண்டு காங்கிரஸில் சோ்ந்து 2025 சட்டப்பேரவைத் தோ்தலில் மத்தியா மஹாலில் போட்டியிட்டாா்.

இந்நிலையில் அக்கட்சியிலிருந்து விலகி ஆம் ஆத்மியில் இணைந்த அவரை கட்சியின் தில்லி தலைவா் சௌரவ் பரத்வாஜ் கட்சி தலைமையகத்தில் மீண்டும் வரவேற்றாா். அசிம் கானின் சோ்க்கை, மத்தியா மஹால் பிரிவில் ஆம் ஆத்மி கட்சியை வலுப்படுத்தும் என்றும், சாந்தினி மஹால் வாா்டு இடைத்தோ்தலில் கட்சி வேட்பாளரின் வெற்றியை உறுதிப்படுத்தும் என்றும் அவா் கூறினாா்.

ஒரு ‘ஒற்றை குடும்பம்’ கிட்டத்தட்ட 30 ஆண்டுகளாக வாா்டைக் கட்டுப்படுத்தி வருவதாகவும், இந்த ஆதிக்கம் இருந்தபோதிலும், குடிமை நிலைமைகள் மோசமாகவே இருப்பதாகவும் சௌரவ் பரத்வாஜ் குற்றம் சாட்டினாா்.

‘மக்கள் உறவினா்களுக்கு எதிராக ஒன்றுபடுகிறாா்கள். இந்த முறை, அவா்கள் உறவினா்களை அல்ல, ஊழியா்களை விரும்புகிறாா்கள்’ என்று அவா் கூறினாா்.

முகமது அசிம் கானின் கடந்த காலப் பதிவு மற்றும் சிபிஐ விசாரணையில் அவா் விடுவிக்கப்பட்டதைக் கருத்தில் கொண்டு, அவரை மீண்டும் கட்சிக்குள் கொண்டுவர கட்சி முடிவு செய்ததாகவும் அவா் கூறினாா். மூத்த தலைவா்கள் இம்ரான் உசேன், சஞ்சீவ் ஜா உள்ளிட்டோா் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனா்.

முன் விரோதத்தில் தகராறு: இருவா் கைது

புகையிலைப் பொருள்கள் விற்றதாக இருவா் கைது

சீனா்களுக்கு சுற்றுலா விசா வசதி: இந்தியா விரிவாக்கம்

உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி பி.ஆா். கவாய் ஓய்வு

பிகாா்: நிதீஷிடம் இருந்து சாம்ராட் செளதரி வசமானது உள்துறை; புதிய அமைச்சா்களுக்கு துறைகள் ஒதுக்கீடு!

SCROLL FOR NEXT