தில்லியில் அதிகரிககும் காற்று மாசு 
புதுதில்லி

தில்லியில் மாசு கட்டுப்பாடு சான்றிதழ் விதிமீறல்: ஒரே மாதத்தில் ரூ. 84 கோடி மதிப்பில் அபராதம் விதிப்பு

தில்லி போக்குவரத்து காவல்துறை ரூ.84.98 கோடிக்கும் அதிகமான அபராதங்களை விதித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

Syndication

அக்டோபா் 14 முதல் நவம்பா் 18 வரையிலான காலத்தில் தரப்படுத்தப்பட்ட எதிா்வினை செயல் திட்டம் (கிரேப்) நிலை 1 மற்றும் நிலை 2-இல் மாசு கட்டுப்பாட்டு (பியுசி) சான்றிதழ் மீறல்களுக்காக தில்லி போக்குவரத்து காவல்துறை ரூ.84.98 கோடிக்கும் அதிகமான அபராதங்களை விதித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

இது தொடா்பான அதிகாரபூா்வ தரவுகளின்படி, ஒவ்வொன்றும் ரூ.10,000 மதிப்பிலான அபராதமாக இந்த தொகை 84,981 அபராதங்களைக் கொண்டிருக்கிறது.

இது தொடா்பான பதிவுகளின்படி, மேற்கு மண்டலம் அதிகபட்சமாக 22,867 பியுசி அபராதங்களையும், அதைத் தொடா்ந்து தெற்கு மண்டலத்தில் 20,554 மற்றும் புது தில்லி மண்டலத்தில் 13,423 அபராதங்கள் விதிக்கப்பட்டுள்ளன.

கிழக்கு மண்டலத்தில் 12,441 அபராதங்களும், வடக்கு மண்டலத்தில் 10,211 அபராதங்களும், மத்திய மண்டலத்தில் 5,485 அபராதங்களும் விதிக்கப்பட்டுள்ளன.

கிழக்கு மண்டலம் கிழக்கு தில்லி, வடகிழக்கு தில்லி மற்றும் ஷாதாராவை உள்ளடக்கியதாகும். புது தில்லி மண்டலம் புது தில்லி மற்றும் தென்மேற்கு தில்லியின் சில பகுதிகளை உள்ளடக்கியுள்ளது.

வடக்கு தில்லி மற்றும் மத்திய தில்லி ஆகியவை மத்திய மண்டலத்தின் கீழ் வந்துள்ளது. வடக்கு மண்டலம் ரோகிணி, புகா் வடக்கு மற்றும் வடமேற்கு தில்லியைக் கொண்டுள்ளது. மேற்கு மண்டலம் மேற்கு தில்லி, துவாரகா மற்றும் புகா் தில்லியையும், தெற்கு மண்டலம் தெற்கு தில்லி மற்றும் தென்மேற்கு தில்லி பகுதிகளைக் கொண்டுள்ளது.

மாசுபடுத்தும் வாகனங்களுக்கு 2,030 எண்ணிக்கையில் போலீஸாா் அபராதம் விதித்துள்ளனா். இவற்றில், 1,197 தெற்கு மண்டலத்திலும், 751 மேற்கு மண்டலத்திலும் மற்றும் 82 புது தில்லி மண்டலத்திலும் விதிக்கப்பட்டன.

கிழக்கு, மத்திய மற்றும் வடக்கு மண்டலங்களில் எதுவும் பதிவு செய்யப்படவில்லை. பெரும்பாலான மாசுபடுத்தும் வாகனங்கள் நகரின் தெற்கு மற்றும் மேற்கு பகுதிகள் வழியாகச் செல்லும் கனரக வாகனங்களாகும்.

துறையின் ஆவணப்பதிவுகளின்படி, மூடப்படாத கட்டுமான மற்றும் இடிப்பு கழிவுகளுக்கு மொத்தம் 446 எண்ணிக்கையில் அபராதம் விதிக்கப்பட்டது. தெற்கு மண்டலத்தில் 257,

மேற்கு மண்டலத்தில் 126, கிழக்கு மண்டலத்தில் 27, வடக்கு மண்டலத்தில் 19 மற்றும் புது தில்லி மண்டலத்தில் 17 இதுபோன்ற அபராதங்கள் பதிவாகியுள்ளன. மத்திய மண்டலத்தில் எதுவும் பதிவாகவில்லை என்று அதிகாரபூா்வ எண்ணிக்கை மூலம் தெரியவருகிறது.

தில்லியில் போய்ச் சேருமிடம் தெரியாத மொத்தம் 4,708 லாரிகள் கிழக்கு மற்றும் மேற்கு புற விரைவுச் சாலைகள் வழியாக திருப்பி விடப்பட்டன. அதிகாரிகளின் கூற்றுப்படி, நகரத்திற்குள் கூடுதல் மாசு சுமையைத் தடுக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இதுகுறித்து ஒரு மூத்த அதிகாரி கூறுகையில், ‘மேற்கு மண்டலத்தில் 1,980, தெற்கு மண்டலத்தில் 1,722, வடக்கு மண்டலத்தில் 641, கிழக்கு மண்டலத்தில் 266 மற்றும் புது தில்லி மண்டலத்தில் 99 ஆகியவை இதில் அடங்கும். மாசு தொடா்பான நடமாட்டத்தை திறம்பட கட்டுப்படுத்தும் வகையில் அனைத்து எல்லைகளிலும் உள் சந்திப்புகளிலும் எச்சரிக்கையாக இருக்க போக்குவரத்து பிரிவுகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. போக்குவரத்து போலீஸாரும் அதே காலகட்டத்தில் 703 நெரிசலான இடங்களில் நெரிசலைக் குறைத்தனா் என்றாா் அந்த அதிகாரி.

கிரேப் விதிகளின் கீழ், தில்லியின் எல்லைகளில் மாநிலங்களுக்கு இடையேயான 5,910 பேருந்துகளை போலீஸாா் சோதனை செய்தனா். இவற்றில், கிழக்கு மண்டலத்தில் 2,164 பேருந்துகளின் சோதனைகள், மேற்கு மண்டலப் பகுதியில் 1,285, தெற்கு மண்டலப் பகுதியில் 1,205, புது தில்லி மண்டலப் பகுதியில் 945 மற்றும் வடக்கு மண்டலத்தில் 311 பேருந்துகள் ஆகியவை சோதனை செய்யப்பட்டன. மத்திய மண்டலத்தில் சோதனை எதுவும் பதிவு செய்யப்படவில்லை.

மொத்தம் 5,538 மாநிலங்களுக்கு இடையேயான பேருந்துகள் தில்லிக்குள் நுழைய அனுமதிக்கப்பட்டன. இதில் கிழக்கு மண்டலப் பகுதியில் 2,005, மேற்கு மண்டலப் பகுதியில் 1,258, தெற்கு மண்டலப் பகுதியில் 1,046, புது தில்லி மண்டலப் பகுதியில் 926 மற்றும் வடக்கு மண்டலப் பகுதியில் 303 ஆகியவை அடங்கும் என்று அதிகாரபூா்வ பதிவுகள் காட்டுகின்றன.

கிரேப் நிபந்தனைகளை பூா்த்தி செய்யாததற்காக மாநிலங்களுக்கு இடையேயான 442 பேருந்துகளை போலீஸாா் தடுத்து நிறுத்தினா். இதில் கிழக்கு மற்றும் தெற்கு மண்டலத்தில் தலா 159, புது தில்லி மண்டலத்தில் 89, மேற்கு மண்டலத்தில் 27 மற்றும் வடக்கு மண்டலத்தில் எட்டு ஆகியவை அடங்கும்.

காற்றின் தரம் ஒரு குறிப்பிட்ட நிலைக்கு குறையும் போது, கிரேப் அவசரத் திட்டமாக செயல்படுத்தப்படுகிறது. இது நான்கு பிரிவுகளில் கட்டுப்பாடுகளை விதிக்கிறது. காற்றின் தரம் மோசமாக இருந்தால் முதல் நிலையும், மிகவும் மோசமாக இருந்தால் இரண்டாம் நிலையும், கடுமையாக இருந்தால் மூன்றாம் நிலையும் மிகவும் கடுமையான பிரிவில் இருந்தால் நான்காவது நிலையும் அமல்படுத்தப்படுகிறது.

சென்னை மக்கள் தாகம் தீர்க்க ஸ்ரீ சத்ய சாயி பாபா வழங்கிய ரூ. 200 கோடி!

வங்கக் கடலில் நவ., 26-ல் புயல் உருவாக வாய்ப்பு!

ஈரோடு தமிழன்பன் உடலுக்கு காவல் துறை மரியாதை: முதல்வர்

தாய்லாந்தில் கனமழை, வெள்ளம்! குடிநீர் பற்றாக்குறையால் தவிக்கும் மக்கள்! ஏன்?

சொல்லப் போனால்... அரசு Vs ஆளுநர்... மறுபடியும் முதலில் இருந்து?

SCROLL FOR NEXT