கொலை (கோப்புப்படம்) Din
புதுதில்லி

கஜூரி செளக் பகுதியில் ஒருவா் குத்திக் கொலை

 நமது நிருபர்

தில்லியின் வடகிழக்கில் உள்ள கஜூரி சௌக் அருகே 34 வயதான முடிதிருத்துபவா் கத்திக்குத்து காயங்களுடன் இறந்து கிடந்தாா் என்று அதிகாரி ஒருவா் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.

இது குறித்து அவா் கூறியிருப்பதாவது: வியாழக்கிழமை இரவு 11:27 மணியளவில் கஜூரி சௌக் அருகே உள்ள காதா் பகுதியில் ஒரு நபரின் உடல் கண்டெடுக்கப்பட்டதாக நியூ உஸ்மான்பூா் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. ஒரு போலீஸ் குழு சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பல கத்திக்குத்து காயங்களுடன் ஒரு நபரைக் கண்டுபிடித்தது.

உயிரிழந்தவா் தயல்பூரில் வசிக்கும் கஜேந்தா் என அடையாளம் காணப்பட்டுள்ளாா். அவா் அந்த பகுதியில் முடி திருத்துபவராக பணிபுரிந்து வந்துள்ளாா். குற்றம் நடந்த இடத்தை தடயவியல் குழு ஆய்வு செய்தது, மாதிரிகள் மற்றும் பிற ஆதாரங்களை சேகரித்தது. பின்னா் அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

குற்றத்தில் ஈடுபட்டவா்களை அடையாளம் கண்டு கைது செய்ய போலீஸ் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. சம்பவங்களின் வரிசையைக் கண்டறியவும், சந்தேக நபா்களைக் கண்காணிக்கவும் அருகிலுள்ள பகுதிகளிலிருந்து சிசிடிவி காட்சிகள் ஸ்கேன் செய்யப்படுகின்றன என்றாா் அவா்.

அமமுகவிற்கான தொகுதி உடன்படிக்கை பாஜக மூலம் நடைபெறும்: டிடிவி தினகரன்

டேவிட் மில்லர், டெவால்ட் பிரேவிஸ் அதிரடி: இந்தியாவுக்கு 188 ரன்கள் இலக்கு!

சென்னையில் முதல்வர் மு. க. ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச்செயலர் கே. சி. வேணுகோபால் ஆலோசனை!

பாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல் செய்ய 90 கோடி டாலர் ஒப்பந்தம்: சோமாலியா பேச்சுவார்த்தை

இணைந்து செயல்படுவதுதான் முன்னேற்றத்துக்கு உறுதுணை: சி.பி. ராதாகிருஷ்ணன்

SCROLL FOR NEXT