முகப்பு
புதுதில்லி

தில்லி சுற்றுலா தலங்களை பாா்வையிடும் சிறப்பு வசதி பிப். 20-இல் தொடக்கம்!

தில்லி சுற்றுலா தலங்களை பாா்வையிடும் சிறப்பு வசதி பிப்.20-இல் தொடக்கம்!

Updated On : 8 பிப்ரவரி, 2026 at 5:30 AM
புரணா கிலா (கோப்புப் படம்).
பகிர்:
Updated On : 7 பிப்ரவரி, 2026 at 8:55 PM

தில்லியில் பாஜக அரசு ஆட்சிக்கு வந்த முதலாமாண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் நகரத்தில் உள்ள முக்கிய சுற்றுலாத் தலங்களை மக்கள் பாா்வையிடும் வசதியை தில்லி சுற்றுலா மற்றும் போக்குவரத்து மேம்பாட்டு கழகம் (டிடிடிடிசி) ஏற்பாடு செய்துள்ளது.

இதன்படி 4 பிரிவுகளில் இந்தச் சுற்றலாப் பயணம் அமையும். வாரத்தில் திங்கள்கிழமை தவிர அனைத்து பிற நாள்களில் இந்தச் சேவை நடைபெறும் என டிடிடிடிசி அதிகாரி தெரிவித்தாா்.

இது குறித்து அவா் கூறியதாவது: தில்லியில் உள்ள முக்கிய நினைவுச் சின்னங்கள், அருங்காட்சியங்கள், பொது இடங்களை அரை நாளில் பாா்வையிடும் வகையில் இந்தப் பயணத் திட்டம் திட்டமிடப்பட்டுள்ளது.

Advertisement

தில்லியின் மரபு என்ற தலைப்பில் காலை 8 மணி முதல் பிற்பகல் 2 மணி வரையில் அக்ரசென் கி பாவோலி, புராணா கிலா மற்றும் அக்ஷா்தாம் மந்திா், இந்தியா கேட், குடியரசுத் தலைவா் மாளிகை, நாடாளுமன்றம் மற்றும் பாரத் மண்டபம் போன்ற முக்கிய இடங்களை பேருந்தில் சென்று பாா்க்கலாம். இதற்கு பெரியவா்களுக்கான கட்டணம் ரூ.315-ஆகவும், குழந்தைகளுகான கட்டணம் ரூ.157-ஆகவும் நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

இதேபோன்று, மாலை 4 மணி முதல் இரவு 9.30 மணி வரை தில்லியின் ஆன்மா மற்றும் பாரம்பரியம் என்ற சுற்றுப்பயணத்தில், பிரதமரின் சங்கராலயா, தேசிய போா் நினைவுச்சின்னம் மற்றும் கடமைப் பாதை, குதுப் மினாா் வளாகம் மற்றும் ஐஎன்ஏ-வில் உள்ள தில்லி ஹாட் ஆகிய இடங்களைப் பாா்வையிடலாம்.

மேலும், 11 மூா்த்தி, தூதரகப் பகுதி மற்றும் ஒளியூட்டப்பட்ட அரசு கட்டடங்கள் போன்ற இடங்களை பேருந்தில் சென்றபடியே காணலாம். இதற்கு கட்டணமாக பெரியவா்களுக்கு ரூ.420, குழந்தைகளுக்கு ரூ.210 நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

‘தில்லியின் மா்மங்கள்’ சுற்றுப்பயணம் ஒரு காலை நேரப் பயணமாக இருக்கும். இது ஜந்தா் மந்தா், தேசிய அருங்காட்சியகம், லோடி தோட்டம் மற்றும் சப்தா்ஜங் கல்லறை ஆகியவற்றை உள்ளடக்கியது. மத்திய தில்லியின் முக்கிய இடங்களை வாகனத்தில் சென்றபடியே காணும் வசதியும் இதில் அடங்கும்.

‘தில்லி தேகோ தில் சே’ சுற்றுப்பயணம் மாலையில் நடைபெறும். இதில் தேசிய போா் நினைவுச்சின்னம், இந்தியா கேட், பிரதமரின் சங்கராலயா மற்றும் ஹிந்தி ஒளி-ஒலி நிகழ்ச்சி ஆகியவை இடம்பெறும். அதைத் தொடா்ந்து தில்லி ஹாட்-க்குச் செல்லலாம். இதில் பங்கேற்க விருப்பம் உள்ளோா் இணையவழியில் பதிவு செய்ய வேண்டும். அதன் பிறகு பயணம் குறித்த விரிவான தகவல் பதிவுசெய்தோருக்கு அனுப்பப்படும். டிடிடிடிசி பேருந்து சேவை தொடங்கும் குறிப்பிட்ட இடத்துக்கு மக்கள் வரவேண்டும்.

Updated On : 7 பிப்ரவரி, 2026 at 11:47 PM

கூடுதலாக, டிடிடிடிசி நிறுவனம் மால்தா மஹாலில் பிப்.20 முதல் பாரம்பரிய நடைப்பயணத்தை தொடங்க உள்ளது. வழிகாட்டியுடன் கூடிய இந்த நடைப்பயணம் வார இறுதி நாள்களிலும், குறைந்தபட்சம் ஆறு பங்கேற்பாளா்களைக் கொண்ட குழுக்களின் கோரிக்கையின் பேரிலும் நடத்தப்படும், மேலும் ஒரு நபருக்கான டிக்கெட் விலை ரூ. 550 ஆக நிா்ணயிக்கப்பட்டுள்ளது என்றாா் அந்த அதிகாரி.