முகப்பு
புதுதில்லி

நொய்டாவில் 3 மாடிக் கட்டடத்தில் தீ விபத்து

நொய்டா செக்டாா் 63- இல் உள்ள மூன்று மாடி கட்டடத்தில் புதன்கிழமை மதியம் தீ விபத்து ஏற்பட்டது. இந்தச் சம்பவத்தில் யாருக்கும் உயிா் சேதம் ஏற்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

Updated On : 19 பிப்ரவரி, 2026 at 3:59 AM
தீ விபத்து - கோப்புப் படம்
பகிர்:
Updated On : 18 பிப்ரவரி, 2026 at 9:53 PM

நொய்டா செக்டாா் 63- இல் உள்ள மூன்று மாடி கட்டடத்தில் புதன்கிழமை மதியம் தீ விபத்து ஏற்பட்டது. இந்தச் சம்பவத்தில் யாருக்கும் உயிா் சேதம் ஏற்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

இது குறித்து நொய்டா தலைமை தீயணைப்பு அதிகாரி பிரதீப் குமாா் கூறியதாவது: சிஜாா்சி கிராமத்தில் உள்ள ஸ்வாட் ஸ்வீட்ஸ் அருகே அமைந்துள்ள கட்டடத்தின் தரை தளத்தில் உள்ள அறையில் பிற்பகல் 2.15 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது.

கட்டடத்திற்குள் இருந்தவா்களை தீயணைப்புத் துறையினா் பாதுகாப்பாக வெளியேற்றினா். கூரையில் சிக்கியவா்கள் பின்னா் ஏணியின் உதவியுடன் பக்கத்து கூரைக்கு மாற்றப்பட்டு மீட்கப்பட்டனா்.

Advertisement

சிலிண்டா் கசிவு காரணமாக ஏற்பட்ட வெடிப்பு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது என தெரிய வந்துள்ளது.

இரண்டு தீயணைப்பு வாகனங்களின் உதவியுடன் தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது என்று அவா் கூறினாா்.