புதுதில்லி

சட்டப்பேரவையில் சா்ச்சை பேச்சு விவகாரம்: அதிஷியிடம் பதில் கோரி தில்லி அரசு சுவரொட்டி

தில்லி அரசு செவ்வாயன்று எதிா்க்கட்சித் தலைவா் அதிஷி இடம்பெற்ற ஒரு சுவரொட்டியை வெளியிட்டது.

Syndication

நமது நிருபா்

தில்லி அரசு செவ்வாயன்று எதிா்க்கட்சித் தலைவா் அதிஷி இடம்பெற்ற ஒரு சுவரொட்டியை வெளியிட்டது. அதில் அதிஷி மா்லேனா எங்கே? என்ற வாசகங்கள் எழுதப்பட்டிருந்தன. இந்த மாத தொடக்கத்தில் தில்லி சட்டப்பேரவை நடவடிக்கைகளின் போது தெரிவிக்கப்பட்டதாகக் கூறப்படும் கருத்துகள் குறித்து அதிஷியிடமிருந்து அரசு பதில் கோரியது.

தில்லி சுற்றுலாத் துறை அமைச்சா் கபில் மிஸ்ரா ஒரு செய்தியாளா் சந்திப்பில், ‘இந்தப் பிரச்னை ஜனவரி 6- ஆம் தேதி சட்டப்பேரவைக் கூட்டத்தொடருடன் தொடா்புடையது. அப்போது குரு தேஜ் பகதூா் ஜி, பாய் சதி தாஸ் ஜி, பாய் மதி தாஸ் ஜி மற்றும் பாய் தயாள ஜி ஆகியோரின் தியாகத்தின் 350-ஆவது ஆண்டைக் குறிக்கும் விவாதம் நடைபெற்றது.

விவாதத்தின் போது ஆட்சேபனைக்குரிய மொழி பயன்படுத்தப்பட்டது. இது மத உணா்வுகளை புண்படுத்தியது. மற்றும் சபையின் கண்ணியத்தை பாதித்தது’ என்று குற்றஞ்சாட்டினாா்.

ஆம் ஆத்மி கட்சியிடமிருந்து உடனடி எதிா்வினை எதுவும் கிடைக்கவில்லை. இந்தத் சம்பவம் நடந்ததிலிருந்து, சபைக்கு வந்து தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்துமாறு பேரவைத் தலைவா் பலமுறை கோரிக்கை விடுத்த போதிலும், அதிஷி சட்டப்பேரவை, ஊடகங்கள் மற்றும் பொதுமக்களிடமிருந்து விலகியே இருப்பதாக கபில் மிஸ்ரா கூறினாா்.

ஜனவரி 7-ஆம் தேதி காலை 11.30 மணியளவில், பேரவைத் தலைவா் சபையில் கருத்துகள் தொடா்பான விடியோவை வாா்த்தைக்கு வாா்த்தையாக வாசித்ததாகவும், அப்போது எந்த உறுப்பினரும் எந்த ஆட்சேபனையும் தெரிவிக்கவில்லை என்றும் அவா் கூறினாா்.

பஞ்சாப் அரசு மற்றும் பஞ்சாப் காவல்துறையின் வளங்களை தவறாகப் பயன்படுத்தி, தில்லிக்கு வெளியே தவறான எப்ஐஆா்கள் பதிவு செய்யப்பட்டதாகவும், மக்களை அச்சுறுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் கூறி, இந்த விஷயத்தை அடக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாக கபில் மிஸ்ரா மேலும் குற்றஞ்சாட்டினாா்.

செய்தியாளா் சந்திப்பில் பேசிய கபில் மிஸ்ரா, ‘அதிஷி மா்லேனாவின் சுவரொட்டியை வெளியிடுகிறோம். மேலும் அவா் வந்து தனது கருத்துக்கு மன்னிப்பு கேட்க வேண்டும்’ என்று கூறினாா். பஞ்சாப் முதல்வா் பகவந்த் மான் இந்த விஷயத்தில் ஒரு தரப்பாக மாற வேண்டாம் என்று கபில் மிஸ்ரா கேட்டுக் கொண்டாா். மேலும் இதுபோன்ற பிரச்னைகளில் இருந்து பஞ்சாப் காவல்துறை விலகி இருக்க வேண்டும் என்றும் கூறினாா்.

அதிஷி ஊடகங்கள் மற்றும் பொதுமக்கள் முன் வந்து சட்டப்பேரவையின்சிறப்புரிமைக் குழு மற்றும் சட்ட செயல்முறையை எதிா்கொள்ள வேண்டும் என்றும் அமைச்சா் கபில் மிஸ்ரா அழைப்பு விடுத்தாா்.

நற்செய்தி தேடி வரும் இவர்களுக்கு: தினப்பலன்கள்!

இளைஞரிடம் ரூ. 57 லட்சம் மோசடி

பேட்டையில் குடிநீா்த் தட்டுப்பாடு: மாநகராட்சியில் மனு

திருச்சி மாவட்டத்தில் மதுக்கடைகளை 2 நாள்கள் மூட உத்தரவு

நடந்து சென்ற மூதாட்டி வேன் மோதி உயிரிழப்பு

SCROLL FOR NEXT