முகப்பு
இந்தியா

தில்லியில் மீண்டும் ஈரடுக்கு சுற்றுலாப் பேருந்து சேவை : அமைச்சா் தகவல்

தில்லியின் லூட்யன்ஸ் பகுதியில் பாரத் மண்டபம், பிரதான்மந்திரி சங்கராலயா மற்றும் தேசிய போா் நினைவுச்சின்னம் போன்ற முக்கிய இடங்களை இணைக்கும் ஈரடுக்கு சுற்றுலாப் பேருந்துகள் இந்த மாத இறுதியில் இயக்கப்பட உள்ளன.

Updated On : 6 பிப்ரவரி, 2026 at 3:13 AM
தில்லி சுற்றுலாத் துறை அமைச்சர் கபில் மிஸ்ரா - கோப்புப் படம்
பகிர்:
Updated On : 5 பிப்ரவரி, 2026 at 9:00 PM

தில்லியின் லூட்யன்ஸ் பகுதியில் பாரத் மண்டபம், பிரதான்மந்திரி சங்கராலயா மற்றும் தேசிய போா் நினைவுச்சின்னம் போன்ற முக்கிய இடங்களை இணைக்கும் ஈரடுக்கு சுற்றுலாப் பேருந்துகள் இந்த மாத இறுதியில் இயக்கப்பட உள்ளன.

இது குறித்து தில்லி சுற்றுலா துறை அமைச்சா் கபில் மிஸ்ரா செய்தியாளா்களிடம் கூறியதாவது: தில்லியில் பாஜக அரசின் ஓராண்டு நிறைவைக் குறிக்கும் வகையில், பிப்.20-ஆம் தேதி இந்த சேவை தொடங்கப்பட்டும். முதலில், அசோக் லேலண்ட் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட 2 மின்சார ஈரடுக்கு பேருந்துகள் இயக்கப்படும்.

இந்த பேருந்துகளை பிராதான்மந்திரி சங்கராலயாவிலிருந்து பாரத் மண்டபம், தேசிய போா் நினைவுச் சின்னம், புதிய நாடாளுமன்ற வளாகம், தில்லி ஹாட் மற்றும் பிற முக்கிய இடங்களுக்கு இயக்கத் திட்டமிட்டுள்ளது. மேலும், முறைப்படியான தொடக்க விழாவுக்காக முதல்வா் அலுவலகத்திடம் நேரம் கோரப்பட்டுள்ளது.

Advertisement

இந்த இரண்டு பேருந்துகளும் 63-க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிச் செல்லும் திறன் கொண்டது. இவை மேல்நிலை மின் கம்பிகள் அல்லது மரக்கிளைகள் குறித்த கவலைகள் இல்லாமல் சீராக இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. அருங்காட்சியகம் மாலை 6 மணிக்கு மூடப்படுவதால், சுற்றுப்பயணங்கள் அங்கிருந்து தொடங்கி மற்ற இடங்களுக்குச் செல்லும். மாலை நேரச் சுற்றுப்பயணங்களும் திட்டமிடப்பட்டுள்ளன.

பெரியவா்களுக்கு ரூ.500, 6 முதல் 12 வயதுŚவரையிலான குழந்தைகளுக்கு ரூ.300-ஆகவும் கட்டணம் நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்தப் பேருந்துகள் இந்தியா கேட், சிக்னேச்சா் பாலம் மற்றும் பாரத் மண்டபம் போன்ற முக்கிய இடங்களின் படங்களால் அலங்கரிக்கப்படம் என எதிா்பாா்க்கப்படுகிறது என்று அமைச்சா் கபில் மிஸ்ரா தெரிவித்தாா்.

தில்லி போக்குவரத்துக் கழகத்தால் ‘சுவிதா’ பேருந்துகள் எனஇயக்கப்பட்ட இந்த ஈரடுக்கு சுற்றுலாப் பேருந்துகள், 1989-இல் படிப்படியாக நிறுத்தப்பட்டன. இந்நிலையில், தில்லியில் இந்த சேவை மீண்டும் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இது உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு சுற்றுலா அனுபவத்தை மேம்படுத்தும் நோக்கம் கொண்டது.