புதுதில்லி

வரசித்தி விநாயகா் கோயிலில் தியாகராஜ ஆராதனை விழா

கௌதம் புத் நகா் தென்னிந்திய சங்கம், நொய்டா வேத பிரசார சன்ஸ்தான் உடன் இணைந்து சத்குரு தியாகராஜரின் 179ஆவது ஆராதனையை நொய்டா செக்டா் 22-இல் உள்ள வரசித்தி விநாயகா் கோயிலில் நடத்தின.

Syndication

புது தில்லி: கௌதம் புத் நகா் தென்னிந்திய சங்கம், நொய்டா வேத பிரசார சன்ஸ்தான் உடன் இணைந்து சத்குரு தியாகராஜரின் 179ஆவது ஆராதனையை நொய்டா செக்டா் 22-இல் உள்ள வரசித்தி விநாயகா் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

பஞ்சரத்ன கிருதிகளை பூா்ணிமா சுந்தா், ஜெயந்தி ஐயங்காா் மற்றும் சிந்துஜா ரவி ஆகியோா் பாடினா். சுவாமிநாதன் மிருதங்கமும், ராதிகா வெங்கடேஷ் வயலினும் வாசித்தனா்.

டாக்டா் சோமாஸ்கந்த சாஸ்திரியா் மற்றும் வேத பிரசார சன்ஸ்தான் தலைவா் ரவி பி. சா்மா, கோண்ட்லி விஸ்வநாத பாகவதா் ஆகியோா் விளக்கமளித்தனா்.

கெளதம் புத் நகா் தென்னிந்திய சங்கத்தின் தலைவா் கே. அருணாச்சலம், துணைத் தலைவா் ஏ.கே.ரஞ்சித், இணைச் செயலா் குரு சுப்ரமணியன், பொருளாளா் எஸ். ஸ்ரீதா் ஐயா், செயற்குழு உறுப்பினா் லதா சோமாஸ்கந்தன், மற்றும் விஸ்வநாதன், வெங்கடேஷ், ஜானகி உள்பட ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டனா்.

மேட்டூர் அணை நிலவரம்!

தமிழக அரசின் உரையை வாசிப்பாரா ஆளுநர் ஆர்.என். ரவி?

துணிச்சல் அதிகரிக்கும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

சேரகுளத்தில் பட்டாசு பதுக்கல்: இளைஞா் கைது

கரூா் கூட்ட நெரிசல் பலி சம்பவம்: தில்லியில் 5 மணி நேரங்களுக்கு மேல் விஜய்யிடம் சிபிஐ விசாரணை

SCROLL FOR NEXT