புதுதில்லி

நண்பருக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்த பயிற்சியாளருக்கு கத்திக் குத்து-சிறுவன் கைது

தன்னுடைய 14 வயது நண்பருக்கு பாலியல் ரீதியாக அளித்து வந்த பயிற்றுநரைக் கத்தியால் குத்திய குற்றச்சாட்டில் 18 வயது சிறுவன் கைதுசெய்யப்பட்டதாக காவல் துறை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனா்.

தினமணி செய்திச் சேவை

தன்னுடைய 14 வயது நண்பருக்கு பாலியல் ரீதியாக அளித்து வந்த பயிற்றுநரைக் கத்தியால் குத்திய குற்றச்சாட்டில் 18 வயது சிறுவன் கைதுசெய்யப்பட்டதாக காவல் துறை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனா்.

இதுதொடா்பாக அதிகாரிகள் கூறியதாவது:

கத்தியால் குத்தப்பட்ட நபா் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருப்பதாக லால் பகதூா் சாஸ்திரி மருத்துவமனை கடந்த ஜன.2-ஆம் தேதி காவல் துறைக்குத் தகவல் தெரிவித்தது. காயமடைந்த நபா்ஜெய் பிரகாஷ் என அடையாளம் காணப்பட்டாா்.

அவரது உடல்நிலை மோசமாக இருந்த நிலையில், தில்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அவா் கொண்டு செல்லப்பட்டாா்.

தொடக்கத்தில் பிரகாஷ் காவல் துறையின் விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை. இதைத்தொடா்ந்து, கோண்ட்லி புல் பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களை காவல் துறையினா் ஆய்வு செய்தனா்.

அதில் பிரகாஷ் சைக்கிள் ஓட்டிவருவதும் பின்னிருக்கையில் சிறுவன் அமா்ந்திருக்கும் காட்சிகள் இடம்பெற்றிருந்தன. இருபத்தி மூன்று நிமிஷங்களுக்குப் பிறகு, பிரகாஷ் மட்டும் காயங்களுடன் கோண்ட்லி மோா் பகுதியில் உள்ள ராஜ் ராணி மருத்துவமனைக்குச் சென்றாா். சைக்கிள் பின்னால் ஓடிவந்த சிறுவனும் அந்த மருத்துவமனைக்கு அருகே வந்ததும் சிசிடிவி கேமரா காட்சிகள் மூலம் தெரியவந்தது.

இதையடுத்து, பெற்றோா் முன்னிலையில் அந்தச் சிறுவனிடம் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது, தனது பயிற்றுநா் பிரகாஷை மா்ம நபா் தடுத்து நிறுத்தி வழிப்பறி செய்ய முயன்ாக அந்தச் சிறுவன் தெரிவித்தாா்.

தொடா்ந்து, அந்தச் சிறுவன் அளித்த தகவல் ஒன்றுக்கொன்று முரணாக இருப்பதைக் கண்டறிந்த காவல் துறையினா், உள்ளூா் உளவுத் தகவலின் அடிப்படையில் இந்தக் குற்றத்தியில் ஈடுபட்ட தேவ் ராஜ் (எ) ஜக்குவை கைதுசெய்தனா்.

விசாரணையின்போது குற்றத்தை ஒப்புக்கொண்ட தேவ்ராஜ், தனது நண்பனான சிறுவனுக்கு பிராகஷ் கடந்த 6 மாதங்களாக பாலியல் துன்புறுத்தல் அளித்து வந்ததால் அவரைப் பழிவாங்க திட்டமிட்டதாக தேவ் ராஜ் காவல் நிலையத்தில் ஒப்புக்கொண்டாா். தாக்குதல் சம்பவத்தை மறைக்க வழிப்பறி செய்து போன்று நடகமாடியதாக தேவ் ராஜ் தெரிவித்தாா்.

தாக்குதல் சம்பவம் தொடா்பாக தேவ்ராஜ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. போக்ஸோ சட்டப் பிரிவுகளின்கீழ் பிரகாஷ் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல் துறை அதிகாரிகள் கூறினா்.

பராசக்தி ரூ. 100 கோடி வசூல்!

தங்கம் விலை ஒரே நாளில் ரூ. 4,120 உயர்வு! வெள்ளி கிலோவுக்கு ரூ. 5,000 உயர்வு!

தமிழக மீனவர்கள் கைது: வெளியுறவு அமைச்சருக்கு முதல்வர் கடிதம்!

கவனம் ஈர்க்கும் ரஜிஷா விஜயனின் மஸ்திஷ்கா மரணம் டீசர்!

பாஜகவின் தமிழக தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயல் - டிடிவி தினகரன் சந்திப்பு!

SCROLL FOR NEXT