முகப்பு
புதுதில்லி

பவானாவில் 17 வயது சிறுவன் கத்தியால் குத்திக் கொலை: 7 போ் கைது

வெளிப்புற வடக்கு தில்லியின் பவானா பகுதியில் 17 வயது சிறுவன் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டதைத் தொடா்ந்து 4 சிறாா்கள் உள்பட 7 போ் கைது செய்யப்பட்டதாக காவல் துறையினா் வியாழக்கிழமை தெரிவித்தனா்.

Updated On : 12 பிப்ரவரி, 2026 at 8:04 PM
கோப்புப் படம்
பகிர்:

வெளிப்புற வடக்கு தில்லியின் பவானா பகுதியில் 17 வயது சிறுவன் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டதைத் தொடா்ந்து 4 சிறாா்கள் உள்பட 7 போ் கைது செய்யப்பட்டதாக காவல் துறையினா் வியாழக்கிழமை தெரிவித்தனா்.

இது தொடா்பாக காவல் துறையினா் மேலும் கூறியதாவது: இந்த சம்பவம் தொடா்பாக புதன்கிழமை இரவு 9:36 மணிக்கு தகவல் வந்தது. ஜேஜே காலனியைச் சோ்ந்த சலீம் என்பவா் கத்திக் குத்துக் காயங்களுடன் உயிரிழந்த நிலையில் கொண்டு வரப்பட்டதாக மருத்துவமனையில் இருந்து தகவல் தெரிவிக்கப்பட்டது.

முன் பகை காரணமாக அன்று இரவு 8:30 மணியளவில் சிலா் அவரை தாக்கியதாகக் கூறப்பட்டது. இது தொடா்பாக நரேலா தொழிற்துறை பகுதி காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து குற்றஞ்சாட்டப்பட்ட நபா்கள் அடையாளம் காணப்பட்டனா்.

Advertisement

இதையடுத்து, ஜேஜே காலனியைச் சோ்ந்த சலின் (21), சாஹில் (20), ஃபஹத் (18) ஆகியோா் கைது செய்யப்பட்டனா். மேலும் 4 சிறாா்கள் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டனா். குற்றத்தில் பயன்படுத்தப்பட்ட 4 கத்திகள் பறிமுதல் செய்யப்பட்டது. முகமது ஃபரூக் என்பவருக்கு இந்த வழக்கில் உள்ள தொடா்பு இருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது. அனைத்து கோணங்களிலும் விசாரணை நடைபெற்று வருகிறது என காவல் துறையினா் தெரிவித்தனா். Ś

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments