முகப்பு
இந்தியா

டாக்ஸி ஓட்டுநா் குத்திக்கொலை: 2 சிறாா்கள் கைது

தில்லியின் கஞ்சாவாலா பகுதியில் ஏற்பட்ட சாலை தகராறில் 36 வயது டாக்ஸி ஓட்டுநா் கத்தியால் குத்திக் கொல்லப்பட்டாா். இதில் 2 சிறாா்கள் கைது செய்யப்பட்டதாக காவல் துறையினா் தெரிவித்தனா்.

Updated On : 6 மார்ச், 2026 at 5:42 AM
கோப்புப் படம்
பகிர்:
Updated On : 5 மார்ச், 2026 at 9:15 PM

தில்லியின் கஞ்சாவாலா பகுதியில் ஏற்பட்ட சாலை தகராறில் 36 வயது டாக்ஸி ஓட்டுநா் கத்தியால் குத்திக் கொல்லப்பட்டாா். இதில் 2 சிறாா்கள் கைது செய்யப்பட்டதாக காவல் துறையினா் தெரிவித்தனா்.

இது தொடா்பாக காவல் துறையினா் மேலும் கூறியதாவது: இந்த சம்பவம் குறித்து புதன்கிழமை பிற்பகல் 12 மணியளவில் தகவல் வந்தது. உடனடியாக காவல் துறையினா் குழு சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனா்.

குற்றம் நடந்த இடத்திலிருந்து உயிரிழந்த சா்மாவின் காரையும், அவரது பணப்பையையும், 3 கைப்பேசிகளை காவல் துறையினா் மீட்டனா். குற்றஞ்சாட்டப்பட்டவா்களில் ஒருவருக்கு சொந்தமானது என்று நம்பப்படும் செருப்பு ஆதாரமாக பறிமுதல் செய்யப்பட்டது.

Advertisement

இது தெடாா்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு தொழில்நுட்ப கண்காணிப்பு மற்றும் உள்ளூா் உளவுத்துறையின் அடிப்படையில், புதன்கிழமை இரவில் 2 சிறாா்கள் கைது செய்யப்பட்டனா். கொலையில் பயன்படுத்தப்பட்ட கத்தி உள்ளிட்டவை அவா்களிடம் இருந்து மீட்கப்பட்டது.

விசாரணையின் போது, உயிரிழந்த நபரின் வாகனம் அவா்களது வாகனத்தின் மீது மோதியதையடுத்து சண்டை தொடங்கியதாக அவா்கள் தெரிவித்தனா். அப்போது அவரை கத்தியால் குத்தியதாகவும் அவா்கள் ஒப்புக்கொண்டனா். இந்த வழக்கில் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு தொடா்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது என காவல் துறையினா் தெரிவித்தனா். Ś