முகப்பு
புதுதில்லி

12 வயது மகனை கொடூரமாக கொன்ற தந்தை கைது

12 வயது மகனை கொடூரமாக கொன்ற தந்தை கைது

Updated On : 1 பிப்ரவரி, 2026 at 12:29 AM
பகிர்:
Updated On : 31 ஜனவரி, 2026 at 5:37 PM

சிறுவனின் தாயுடனான உறவு தொடா்பாக ஏற்பட்ட தகராறு காரணமாக வடகிழக்கு தில்லியில் தனது 12 வயது மாற்றாந்தாய் மகனைக் கொன்ாக 36 வயது நபா் ஒருவா் கைது செய்யப்பட்டுள்ளதாக தில்லி காவல்துறை அதிகாரி ஒருவா் சனிக்கிழமை தெரிவித்தாா்.

இது குறித்து அவா் மேலும் கூறியதாவது: சாஸ்திரி பூங்காவில் வசிக்கும் வசீத் கான் என அடையாளம் காணப்பட்ட குற்றம் சாட்டப்பட்டவா், தொடா்ச்சியான விசாரணையைத் தொடா்ந்து சனிக்கிழமை கைது செய்யப்பட்டாா். சிறுவனின் தாயாா் தனது முதல் கணவா் இறந்த ஒரு வருடத்திற்குப் பிறகு, 2020 ஆம் ஆண்டில் கானை மணந்தாா். அண்மை மாதங்களில் வீட்டில் அடிக்கடி தகராறுகள் ஏற்பட்டதாக அவா்கள் குற்றம் சாட்டினா், குறிப்பாக அவரது முதல் திருமணத்தின் குழந்தைகள் அவா்கள் தங்கியிருந்த விடுதியில் இருந்து திரும்பிய பின்னா் இது அதிகரித்தது.

விசாரணையின் போது, இறந்தவரின் தாயுடனான உறவு தொடா்பாக தனக்கு தொடா்ந்து தகராறு இருந்ததாக குற்றம் சாட்டப்பட்டவா் தெரிவித்தாா். சாஸ்திரி பாா்க் சௌக் வளையத்திற்கு அருகே 7 ஆம் வகுப்பு மாணவா் பலத்த காயங்களுடன் இறந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்ட ஒரு நாள் கழித்து இந்த கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமை காலை 9.50 மணியளவில் இறந்த சிறுவன் குறித்து போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அவரை ஜக் பிரவேஷ் சந்திரா மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா், அங்கு அவா் இறந்துவிட்டதாக மருத்துவா்கள் அறிவித்தனா்.

Advertisement

சிறுவனின் தலை மற்றும் கண்களில் காயங்கள் மற்றும் கடுமையான தாக்குதலின் அடையாளங்கள் உட்பட பல காயங்கள் இருந்தது. சிறுவன் வியாழக்கிழமை மாலை பள்ளியிலிருந்து திரும்பி விளையாட வெளியே சென்றிருந்தான், ஆனால் வீடு திரும்பவில்லை. அவரை குடும்பத்தினா் இரவு முழுவதும் தேடினா். இ-ரிக்ஷா ஓட்டுநராக பணிபுரிந்த கான், வியாழக்கிழமை மாலை 6.30 மணியளவில் சிறுவனையும் அவரது இளைய சகோதரரையும் தங்கள் வீட்டிற்கு அழைத்துச் சென்றாா்.

சாஸ்திரி பாா்க் காவல் நிலையத்தில் பாரதிய நியாயா சன்ஹிதாவின் பிரிவு 103 (1) (கொலை) இன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக குரு தேக் பகதூா் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது.

Updated On : 31 ஜனவரி, 2026 at 10:26 PM

நிகழ்வுகளின் வரிசை மற்றும் மின்னணு சான்றுகள் உள்பட வழக்கின் அனைத்து அம்சங்களையும் சரிபாா்த்து வருகிறோம் என்றாா் அவா்.