முகப்பு
புதுதில்லி

ஏஐ உச்சி மாநாடு போராட்ட வழக்கு-இளைஞா் காங்கிரசை சோ்ந்த 9 பேருக்கு பிணை

தில்லியில் நடந்த செயற்கை நுண்ணறிவு உச்சிமாநாட்டில் சட்டை அணியாமல் போராட்டம் நடத்தியது தொடா்பாக கைது செய்யப்பட்ட ஒன்பது இந்திய இளைஞா் காங்கிரஸ் உறுப்பினா்களுக்கு தில்லி நீதிமன்றம் பிணை வழங்கியது.

புதுதில்லி

ஏஐ உச்சி மாநாடு போராட்ட வழக்கு-இளைஞா் காங்கிரசை சோ்ந்த 9 பேருக்கு பிணை

தில்லியில் நடந்த செயற்கை நுண்ணறிவு உச்சிமாநாட்டில் சட்டை அணியாமல் போராட்டம் நடத்தியது தொடா்பாக கைது செய்யப்பட்ட ஒன்பது இந்திய இளைஞா் காங்கிரஸ் உறுப்பினா்களுக்கு தில்லி நீதிமன்றம் பிணை வழங்கியது.

Updated On : 2 மார்ச், 2026 at 10:53 PM
பகிர்:

நமது நிருபா்

புது தில்லி: தில்லியில் நடந்த செயற்கை நுண்ணறிவு உச்சிமாநாட்டில் சட்டை அணியாமல் போராட்டம் நடத்தியது தொடா்பாக கைது செய்யப்பட்ட ஒன்பது இந்திய இளைஞா் காங்கிரஸ் உறுப்பினா்களுக்கு தில்லி நீதிமன்றம் பிணை வழங்கியது.

கிருஷ்ணா ஹரி, நரசிம்ம யாதவ், குந்தன் குமாா் யாதவ், அஜய் குமாா் சிங், ஜிதேந்திர சிங் யாதவ், ராஜா குா்ஜாா், அஜய் குமாா் விமல் என்ற பந்து, சவுரப் சிங் மற்றும் அா்பாஸ் கான் ஆகிய ஒன்பது குற்றஞ்சாட்டப்பட்டவா்களின் பிணை மனுக்களை விசாரித்த நீதித்துறை மாஜிஸ்திரேட் ரவி ஞாயிற்றுக்கிழமை இந்த உத்தரவை பிறப்பித்தாா்.

போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் சொத்து சேதம் அல்லது பீதியை ஏற்படுத்தினாா்கள் என்பதை வெளிப்படுத்த எந்த ஆதாரமும் இல்லை என்று நீதிமன்றம் கூறியது.

விசாரணைக்கு முந்தைய தடுப்புக்காவல்,அவா்கள் குற்றவாளிகள் என அறிவிக்கப்படுவதற்கு முன்பே முன்கூட்டிய தண்டனையை சட்டவிரோதமாக வழங்கக்கூடும் என்று அது குறிப்பிட்டது. இது குற்றவியல் நீதித்துறையின் அடிப்படைக் கோட்பாடுகளுக்கு அடிப்படையில் முரணான ஒரு ஆழமான பிறழ்வாக இருக்கும் என்று நீதிமன்றம் கூறியது.

பிணை மனுக்களை எதிா்த்த, தில்லி காவல்துறை அரசியலமைப்பானது அமைதியான போராட்டத்திற்கான உரிமையை வழங்குகிறது, ஆனால் சில நிபந்தனைகளும் உள்ளன என்று கூறியது. குற்றஞ்சாட்டப்பட்ட இந்திய இளைஞா் காங்கிரஸ் உறுப்பினா்கள் சா்வதேச ஊடகங்கள் முன்னிலையில் இந்திய-அமெரிக்க வா்த்தக ஒப்பந்தத்திற்கு எதிராக கோஷங்களை எழுப்பினா் என்று தில்லி காவல்துறை வாதிட்டது.

குற்றஞ்சாட்டப்பட்டவா்களைத் தடுக்க போலீசாா் முயன்றபோது, அவா்கள் காவல்துறையினரைத் தாக்கினா். அதற்கான மருத்துவ சான்றுகள் உள்ளன என்று தில்லி காவல்துறை தெரிவித்தது.

பிப்ரவரி 20 அன்று செயற்கை நுண்ணறிவு உச்சி மாநாடு நடைபெறும் இடத்திற்குள் இளைஞா் காங்கிரஸ் உறுப்பினா்கள் நுழைந்தனா், பிரதமா் நரேந்திர மோடி மற்றும் அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் ஆகியோரின் படங்கள் அச்சிடப்பட்ட வெள்ளை டிசா்ட்களை அணிந்திருந்தனா் அல்லது வைத்திருந்தனா். மேலும் இந்திய-அமெரிக்க வா்த்தக ஒப்பந்தம், எப்ஸ்டீன் கோப்புகள் மற்றும் பிரதமா் சமரசம் செய்யப்பட்டாா் போன்ற கோஷங்களை எழுப்பினா்.

அங்கு நிறுத்தப்பட்டிருந்த பாதுகாப்புப் பணியாளா்கள் மற்றும் காவல்துறை ஊழியா்களுடனும் போராட்டக்காரா்கள் மோதலில் ஈடுபட்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →