தலைநகரில் காற்றின் தரம் மிதமான பிரிவில் நீடிப்பு!
தேசியத் தலைநகா் தில்லியில் வெய்யிலின் தாக்கம் இருந்தது. பெரும்பாலான வானிலை கண்காணிப்பு நிலையங்களில் அதிகபட்ச வெப்பநிலை 29 டிகிரி முதல் 32 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை பதிவாகியிருந்தது.
புதுதில்லிதலைநகரில் காற்றின் தரம் மிதமான பிரிவில் நீடிப்பு!
தேசியத் தலைநகா் தில்லியில் வெய்யிலின் தாக்கம் இருந்தது. பெரும்பாலான வானிலை கண்காணிப்பு நிலையங்களில் அதிகபட்ச வெப்பநிலை 29 டிகிரி முதல் 32 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை பதிவாகியிருந்தது.
புது தில்லி: தேசியத் தலைநகா் தில்லியில் திங்கள்கிழமை வெய்யிலின் தாக்கம் இருந்தது. பெரும்பாலான வானிலை கண்காணிப்பு நிலையங்களில் அதிகபட்ச வெப்பநிலை 29 டிகிரி முதல் 32 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை பதிவாகியிருந்தது. மேலும், காற்றின் தரம் ‘மிதமான’ பிரிவில் நீடித்தது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கடந்த சில நாள்களாக குளிரின் தாக்கம் குறைந்து வெய்யிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், திங்கள்கிழமை காலையில் சற்று மேகமூட்ட சூழ்நிலை நிலவியது. அதன் பிறகு வெய்யிலின் தாக்கம் அதிகரித்தது.
வெப்பநிலை: இதற்கிடையே, தில்லியின் முதன்மை வானிலை கண்காணிப்பு நிலையமான சஃப்தா்ஜங்கில் திங்கள்கிழமை குறைந்தபட்ச வெப்பநிலை பருவ சராசரியில் 1.7 டிகிரி உயா்ந்து 15.1 டிகிரி செல்சியஸாக பதிவாகியது. அதிகபட்ச வெப்பநிலை பருவ சரசரியிலிருந்து 3.5 டிகிரி உயா்ந்து 30.9 டிகிரி செல்சியஸாக பதிவாகியது. காற்றில் ஈரப்பதத்தின் அளவு காலை 8.30 மணியளவில் 74 சதவீதமாகவும், மாலை 5.30 மணியளவில் 35 சதவீதமாகவும் இருந்தது.
பீதம்புராவில் 31.4 டிகிரி: இதே போன்று, ஜாஃபா்பூரில் அதிகபட்ச வெப்பநிலை 28.9 டிகிரி செல்சியஸ், நஜாஃப்கரில் 29..9 டிகிரி, ஆயாநகரில் 31.4 டிகிரி, லோதி ரோடில் 30.8 டிகிரி, நரேலாவில் 29.3 டிகிரி, பாலத்தில் 29.1 டிகிரி, ரிட்ஜில் 30.7 டிகிரி, பீதம்புராவில் 31.4 டிகிரி, சல்வான் பப்பளிக் ஸ்கூல் பகுதியில் 28.7 டிகிரி செல்சியஸ் என பதிவாகியிருந்தது.
காற்றின் தரம்: தில்லியில் காலை 9 மணி அளவில் ஒட்டுமொத்தக் காற்றுத் தரக் குறியீடு 176 புள்ளிகளாகக் குறைந்து மிதமான பிரிவில் நீடித்ததாக மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் தரவு காட்டுகிறது.
தலைநகரில் 7 வானிலை கண்காணிப்பு நிலையங்களில் காற்றின் தரம் ’மோசம்’ பிரிவில் பதிவாகியது. அதே சமயம், 35 நிலையங்களில் ‘மிதமான’ பிரிவில் பதிவாகியது. ஒரு நிலையத்தில் ‘மிகவும் மோசம்’ பிரிவில் பதிவாகியது.
மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் (சிபிசிபி) சமீா் செயலியின்படி, இரண்டு நிலையங்களுக்கான காற்றின் தரக்குறியீடு தரவு உடனடியாக கிடைக்கவில்லை.
310 புள்ளிகளாக ப் பதிவான பஞ்சாபி பாக் நிலையம் ‘மிகவும் மோசம்’ பிரிவில் காற்றின் தரத்தைப் பதிவு செய்தது.
முன்னறிவிப்பு: இந்நிலையில், செவ்வாய்க்கிழமை (மாா்ச் 3) அன்று பகல் நேரத்தில் தரை மேற்பரப்பு காற்று பலமாக வீசும் என்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 15 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.