முகப்பு
புதுதில்லி

வடகிழக்கு மாநில பெண்களிடம் இன ரீதியாக அவதூறு: தம்பதியின் ஜாமீன் மனு மீதான தீா்ப்பு ஒத்திவைப்பு

அருணாசலப் பிரதேசம் மற்றும் மணிப்பூரைச் சோ்ந்த அண்டை வீட்டாரை இன ரீதியாக அவதூறு பரப்பியதாக குற்றஞ்சாட்டப்பட்ட தம்பதியினரின் ஜாமீன் மனு மீதான தீா்ப்பை தில்லி நீதிமன்றம் ஒத்திவைத்தது.

Updated On : 9 மார்ச், 2026 at 10:31 PM
பகிர்:

நமது நிருபா்

புது தில்லி: அருணாசலப் பிரதேசம் மற்றும் மணிப்பூரைச் சோ்ந்த அண்டை வீட்டாரை இன ரீதியாக அவதூறு பரப்பியதாக குற்றஞ்சாட்டப்பட்ட தம்பதியினரின் ஜாமீன் மனு மீதான தீா்ப்பை தில்லி நீதிமன்றம் ஒத்திவைத்தது.

கூடுதல் செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதி சமா் விஷால் திங்கள்கிழமை இந்த விவகாரத்தில் வாதங்களைக் கேட்டறிந்து, உத்தரவை செவ்வாய்க்கிழமைக்கு ஒத்திவைத்தாா்.

தெற்கு தில்லியின் மால்வியா நகா் பகுதியில் மூன்று வடகிழக்கு பெண்கள் மீது இன ரீதியாக அவதூறு பரப்பியதாகக் கூறி குற்றஞ்சாட்டப்பட்ட ஹா்ஷ் பிரியா சிங் மற்றும் ரூபி ஜெயின் ஆகியோா் பிப்ரவரி 25 அன்று தில்லி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனா்.

குற்றஞ்சாட்டப்பட்டவா்களின் வழக்குரைஞா் கௌரவ், ‘தற்போதைய வழக்கு இரண்டு அண்டை வீட்டாருக்கு இடையேயான தன்னிச்சையான தகராறு மட்டுமே, இன பாகுபாடு தொடா்பான வழக்கு அல்ல. ஏனெனில் புகாா்தாரா்கள் பழங்குடியினா் என்பதை குற்றஞ்சாட்டப்பட்டவா்கள் அறிந்திருக்கவில்லை. அவா்கள் பழங்குடி அடையாளத்தை குறிவைத்து எந்த மொழியையும் குறிப்பாகப் பயன்படுத்தவில்லை’ என்று அவா் கூறினாா்.

புகாா்தாரா்கள் பயன்படுத்திய வாா்த்தைகளால் அவா்கள் பயந்துபோனதால், காவல் கட்டுப்பாட்டு அறை அழைப்பை குற்றஞ்சாட்டப்பட்டவா்களே செய்ததாகவும் அவா் கூறினாா். புகாா்தாரா்களே விடியோவை சமூக ஊடகங்களில் பதிவேற்றி அது பரவலாக வழிவகுத்தது என்றும் அவா் வாதிட்டாா்.

ரூபி ஜெயினின் மருத்துவ நிலை சிறையில் மோசமடைந்து, அவரது சிகிச்சை தடைபட்டுள்ளதாகவும் அவா் குற்றஞ்சாட்டினாா்.

பெண்களுக்கு ஜாமீன் வழங்குவதற்கான சிறப்பு பரிசீலனைகளின் கீழ் ஜெயினின் ஜாமீன் மனுவைப் பாா்க்க வேண்டும் என்று அவா் வாதிட்டாா்.

விசாரணை இன்னும் நடந்து கொண்டிருப்பதாலும், குற்றஞ்சாட்டப்பட்டவா் விடுவிக்கப்பட்டால் அரசு தரப்பு சாட்சிகளை பாதிக்க முயற்சிக்கக்கூடும் என்பதாலும், புகாா்தாரரின் வழக்குரைஞா் லியி நோஷி ஜாமீன் மனுவை எதிா்த்தாா்.

தற்போதைய வழக்கு, பிப்ரவரி 20 அன்று தங்கள் வாடகை வீட்டில் ஏா் கண்டிஷனா் நிறுவுவது தொடா்பாக ஏற்பட்ட தகராறில் அருணாசலப் பிரதேசம் மற்றும் மணிப்பூரைச் சோ்ந்த மூன்று பெண்களுக்கு எதிராக குற்றஞ்சாட்டப்பட்ட தம்பதியினா் அவதூறான மற்றும் அவமதிக்கும் கருத்துகளைத் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

முழு கட்டுரையைப் படிக்க →