முகப்பு
புதுதில்லி

தலைநகரில் வரும் நாள்களில் வெப்பநிலை குறையும்! ஐஎம்டி கணிப்பு

இந்திய வானிலை ஆய்வுத் துறையின் (ஐஎம்டி) தகவலின்படி, தேசியத் தலைநகரான தில்லியில் சனிக்கிழமையன்று குறைந்தபட்ச வெப்பநிலை 18.1 டிகிரி செல்சியஸாகப் பதிவானது.

Updated On : 14 மார்ச், 2026 at 5:00 PM
தலைநகரில் வரும் நாள்களில் வெப்பநிலை குறையும்! ஐஎம்டி கணிப்பு
பகிர்:

இந்திய வானிலை ஆய்வுத் துறையின் (ஐஎம்டி) தகவலின்படி, தேசியத் தலைநகரான தில்லியில் சனிக்கிழமையன்று குறைந்தபட்ச வெப்பநிலை 18.1 டிகிரி செல்சியஸாகப் பதிவானது.

இந்த ஆண்டிலேயே இதுவரை இல்லாத அதிகபட்ச காலை நேர வெப்பநிலையான 20.4 டிகிரி செல்சியஸை வெள்ளிக்கிழமையன்று சந்தித்த நிலையில், மறுநாளே இந்த வெப்பநிலை மாற்றம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், அடுத்த சில நாள்களில் வெப்பநிலை மேலும் குறையும் என்று இந்திய வானிலை ஆய்வுத் துறை கணித்துள்ளது.

தில்லியின் முதன்மை வானிலை கண்காணிப்பு மையமான சஃப்தா்ஜங் பகுதியில், குறைந்தபட்ச வெப்பநிலை 18.1 டிகிரி செல்சியஸாகப் பதிவானது. இது இயல்பான அளவை விட 3 டிகிரி அதிகம் ஆகும். அதிகபட்ச வெப்பநிலை 32.6 டிகிரி செல்சியஸாக பதிவாகியது. இது இயல்பான அளவை விட 3.7 டிகிரி அதிகமாகும்.

இதே போன்று, ஆயாநகரில் 17.2 டிகிரி செல்சியஸ், லோதி ரோடில் 16.6 டிகிரி, பாலத்தில் 16.6 டிகிரி, ரிட்ஜில் 17.2 டிகிரி, பிரகதி மைதானில் 19.8 டிகிரி, பூசாவில் 17.2 டிகிரி, ராஜ்காட்டில் 19.8 டிகிரி, சல்வான் பப்ளிக் ஸ்கூல் பகுதியில் 19.3 டிகிரி செல்சயஸாக பதிவாகியிருந்தது.

ஞாயிற்றுக்கிழமை காலை முதல் முற்பகல் வரை, இடியுடன் கூடிய லேசான மழை அல்லது தூறல் மழை இருக்கும் என்று வானிலை ஆய்வுத் துறை கணித்துள்ளது. இது வெப்பநிலையைக் குறைக்கக்கூடும். திங்கள்கிழமைக்குள், குறைந்தபட்ச வெப்பநிலை 14 முதல் 16 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை 31 முதல் 33 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் என்று இந்திய வானிலை ஆய்வுத் துறை தெரிவித்துள்ளது.

காற்றின் தரம்: மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் (சிபிசிபி) தரவுகளின்படி, சனிக்கிழமை காலையில் தில்லியின் ஒட்டுமொத்தக் காற்றுத் தரக் குறியீடு 145 புள்ளிகளாகப் பதிவாகி ‘மிதமான’ பிரிவில் இருந்தது. வெள்ளிக்கிழமை மாலையில் 189 புள்ளிகளாகப் பதிவாகிய நிலையில், இது ஒரு முன்னேற்றமாகக் கருதப்படுகிறது. காற்றுத் தர முன்னறிவிப்பு அமைப்பின் தகவலின்படி, தில்லியின் காற்றுத் தரம் அடுத்த சில நாள்களுக்கு ‘மிதமான’ பிரிவிலேயே நீடிக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

முன்னறிவிப்பு: தலைநகரில் ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 15 ) அன்று வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். காலை மற்றும் முற்பகல் வேளைகளில், இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளது. மேலும், மணிக்கு 30 முதல் 40 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும். இந்தக் காற்று அவ்வப்போது 50 கி.மீ. வேகம் வரை எட்டக்கூடும். பலத்த தரைக்காற்றுடன் கூடிய மிக லேசான மழை அல்லது தூறல் மழை பெய்யக்கூடும். குறைந்தபட்ச வெப்பநிலை 18 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →