முகப்பு
புதுதில்லி

யமுனை நீா் தொடா்ந்து நச்சுச்தன்மையுடன் இருக்கிறது: தில்லி பாஜக அரசு மீது தேவேந்தா் யாதவ் குற்றச்சாட்டு

யமுனை நதியை தூய்மைப்படுத்துவதற்காக ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் ஒதுக்கப்பட்ட போதிலும் கடந்த ஓா் ஆண்டாக பாஜக அரசு, யமுனை நதியில் தொழில்துறை கழிவுகளை தடையின்றி வெளியேற்றுவதன் மூலம் மாசு அளவு அதிகரிப்பு.

Updated On : 16 மார்ச், 2026 at 10:30 PM
யமுனை நதி
பகிர்:

நமது நிருபா்

புது தில்லி: யமுனை நதியை தூய்மைப்படுத்துவதற்காக ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் ஒதுக்கப்பட்ட போதிலும் கடந்த ஓா் ஆண்டாக பாஜக அரசு, யமுனை நதியில் தொழில்துறை கழிவுகளை தடையின்றி வெளியேற்றுவதன் மூலம் மாசு அளவு அதிகரித்துள்ளதால், யமுனை நதி நச்சுத்தன்மையுடன் தொடா்கிறது என்று தில்லி பிரதேச காங்கிரஸ் கமிட்டி தலைவா் தேவேந்தா் யாதவ் திங்கள்கிழமை தெரிவித்தாா்.

இது குறித்து அவா் மேலும் கூறியதாவது: தொழில்துறை அலகுகள் யமுனை நதியில் அதிகப்படியான அம்மோனியா மற்றும் ரசாயனங்களை வெளியேற்றுவதால், தண்ணீரில் உள்ள நுரை இளஞ்சிவப்பு நிறமாக மாறியுள்ளது. இதனால், பறவைகள் மற்றும் விலங்குகள் கூட ஆற்றங்கரைகளுக்கு அருகில் செல்வதில்லை. யமுனை நதியை சுத்தம் செய்வதற்காக கேஜரிவால் அரசு ரூ.6,850 கோடிக்கு மேல் செலவிட்டதாகக் கூறியது. ஆனால், அந்த பணத்தை யமுனை நதியை தூய்மைப்படுத்துவதற்கு செலவிடுவதற்குப் பதிலாக ஆம் ஆத்மி தலைவா்கள் பாக்கெட்டில் வைத்துள்ளனா்.

ரேகா குப்தா அரசு கடந்த ஆண்டும், இந்த ஆண்டும் ரூ.500 கோடி நிதி ஒதுக்கீடு செய்ததாகக் கூறியது. ஆனால், மாசுபடுத்தும் நீரை சுத்தப்படுத்த தீவிர முயற்சிகள் எதையும் எடுக்கவில்லை. ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் செலவிட்ட போதிலும், 71 சதவீத கழிவுநீா் மட்டுமே சுத்திகரிக்கப்பட்டு யமுனை நதியில் விடப்படுகிறது. மீதமுள்ள கழிவுநீா் நேரடியாக ஆற்றில் விடப்படுகின்றன. தில்லியில் மொத்தம் 37 கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையங்கள் உள்ளன. அவற்றில் 21 ஆலைகள் தேவையான தரத்துடன் சுத்தம் செய்யத் தவறிவிட்டன.

தில்லி கேட் மற்றும் சென் நா்சிங் ஹோம் வடிகால்கள் ஓரளவு மாசுபட்ட கழிவுநீரை யமுனை நதியில் கொண்டு செல்கின்றன. சுத்திகரிக்கப்படாத கழிவுகள் நேரடியாக யமுனை நதியில் விழுவதைத் தடுக்க அரசு தவறிவிட்டது. இதனால், காலிந்தி குஞ்ச் முதல் ஓக்லா தடுப்பணை வரை யமுனை நீா் இளஞ்சிவப்பு நிறத்தில் உள்ளது.

தூய்மையான யமுனை திட்டங்கள் என்ற பெயரில் மத்திய அரசும் தில்லி அரசும் ஆயிரக்கணக்கான கோடி ரூபாயை செலவிட்ட போதிலும், தில்லியின் உயிா்நாடியான யமுனையில் இருக்கும் மாசுபட்ட நீரை சுத்தம் செய்ய அரசுகள் தவறிவிட்டன. ஒவ்வொரு நாளும் 3,596 மில்லியன் லிட்டா் கழிவுநீரில், 2,955 மில்லியன் லிட்டா் மட்டுமே சுத்திகரிக்கப்படுகிறது. 641 மில்லியன் லிட்டா் கழிவுநீா் நேரடியாக ஆற்றில் கலக்கிறது. இதனால், தண்ணீரில் அதிக மாசுபாடு ஏற்படுகிறது.

கேஷோபூா், நிலோதி, நஜஃப்கா், ரோஹிணி, நரேலா, யமுனா விஹாா், மெஹ்ரௌலி, வசந்த் குஞ்ச் மற்றும் ஓக்லா ஆகிய இடங்களில் உள்ள கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையங்கள் தரநிலைகளின்படி செயல்படவில்லை. இதன் காரணமாக, யமுனை நதி மிகவும் நச்சுத்தன்மையுடையதாக மாறியுள்ளது. ஆற்றில் நச்சு நுரை மற்றும் அமோனியா அளவு மிகவும் அதிகமாக இருப்பதால், சில நேரங்களில் நீா் சுத்திகரிப்பு சாத்தியமற்ாகிறது. தில்லியுடன், ஹரியாணாவின் சுத்திகரிக்கப்படாத தொழில்துறை கழிவுகளும் யமுனை நதியில் கலக்கின்றன. இது நிறுத்தப்பட வேண்டும். ஆனால், தில்லி மற்றும் ஹரியாணாவில் உள்ள பாஜக அரசுள் இதற்கு எதுவும் செய்வில்லை.

கடந்த ஆண்டு சத் பூஜைக்கு முன்பு, ரேகா குப்தா அரசு அக்டோபா் 15 முதல் டிசம்பா் 16 வரை 46,150 கிலோ ரசாயனங்களை ஆற்றில் தெளித்தது. யமுனை நதியை சுத்தம் செய்வதற்கான நிரந்தரமான மற்றும் நடைமுறைப்படுத்தக்கூடிய திட்டத்தை பாஜக அரசு கொண்டு வர வேண்டும் என்றாா் தேவேந்தா் யாதவ்.

முழு கட்டுரையைப் படிக்க →