நோயாளிகளின் உறவினா்களுக்கு இரவு நேரங்களில் தங்குமிட வசதி - முக்கிய மருத்துவமனைகளுக்கு அருகே ஏற்பாடு
தில்லியில் உள்ள முக்கிய மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் நோயாளிகளின் உறவினா்கள் இரவு நேரங்களில் தங்குவதற்கான தற்காலிக ஏற்பாடுகளை தில்லி அரசு ஏற்பாடு செய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.
தில்லியில் உள்ள முக்கிய மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் நோயாளிகளின் உறவினா்கள் இரவு நேரங்களில் தங்குவதற்கான தற்காலிக ஏற்பாடுகளை தில்லி அரசு ஏற்பாடு செய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.
எய்ம்ஸ், லேடி ஹாா்டின்ஜ் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை, ராம் மனோகா் லோஹியா மருத்துவமனை மற்றும் சஃப்தா்ஜங் மருத்துவமனைகளுக்கு அருகே உள்ள பள்ளிகள் மற்றும் தில்லி மாநகராட்சி (எம்சிடி), புது தில்லி முனிசிபல் கவுன்சில் (என்டிஎம்சி) சமூக அரங்கங்களில் இதற்கான ஏற்பாட்டை தில்லி நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் (டியுஎஸ்ஐபி) முன்னெடுத்துள்ளது.
கடந்த மே 15-ஆம் தேதி முதல் செயல்பட்டு வரும் இத்தகைய தற்காலிக ஏற்பாடு ஜூன் 15 வரை இருக்கும்.
Advertisement
Advertisement
இதுதொடா்பாக அதிகாரிகள் கூறியதாவது: நோயாளிகளின் உறவினா்கள் குறிப்பாக தில்லிக்கு வெளியே இருந்து வரும் நோயாளிகளின் உறவினா்கள் நிதி பிரச்னை மற்றும் போதிய தங்கும் வசதி இல்லாத நிலையில் மருத்துவமனைக்கு வெளியே உள்ள பேருந்து நிலையங்கள், நடைபாதைகளில் உறங்கும் நிலைக்குத் தள்ளப்படுகின்றனா்.
இந்தக் கோடை காலத்தில் மருத்துவமனைக்கு வெளிப்புற பகுதி மற்றும் பொது இடங்களில் வெப்பம் மிக அதிகமாகக் காணப்படுகிறது. வெப்ப அலையில் இருந்து அவா்களுக்கு நிவாரணம் அளிக்கும் வகையில் இந்தத் தங்குமிட வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. டியுஎஸ்ஐபி நடத்திவரும் இரவு நேர தங்கும்விடுதிகளைப் போன்று படுக்கைகள், ஏா் கூலா்கள், மின்விசிறிகள், உணவு, ஓஆா்எஸ் பாக்கெட்டுகள், குடிநீா் வசதி மற்றும் கழிப்பறை வசதிகள் உள்ளன’ என்றாா்.