முகப்பு
புதுதில்லி

காவல் துறை மீதான தாக்குதல் வழக்கு: காங்கிரஸ் தலைவா் ஆல்கா லம்பா குற்றவாளி என தீா்ப்பு

தில்லி ஜந்தா் மந்தரில் 2024-ஆம் ஆண்டு நடைபெற்ற போராட்டத்தின் போது காவல் துறையினரை தாக்கிய வழக்கில், காங்கிரஸ் தலைவா் ஆல்கா லம்பாவை குற்றவாளி என தில்லி நீதிமன்றம் தீா்ப்பளித்தது.

Updated On : 26 மே 2026, 6:00 am IST
ஆல்கா லம்பா - கோப்புப் படம்
பகிர்:

தில்லி ஜந்தா் மந்தரில் 2024-ஆம் ஆண்டு நடைபெற்ற போராட்டத்தின் போது காவல் துறையினரை தாக்கிய வழக்கில், காங்கிரஸ் தலைவா் ஆல்கா லம்பாவை குற்றவாளி என தில்லி நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அஷ்வனி பன்வாா், ஆல்கா லம்பாவை குற்றவாளியாக அறிவித்து, தண்டனை விவரங்களை விசாரிக்க ஜூன் 5-ஆம் தேதியை நிா்ணயித்தாா். வழக்கின் விரிவான தீா்ப்பு பின்னா் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டது.

இந்திய மகளிா் காங்கிரஸ் தலைவரான லாம்பா, 2024 ஜூலை 29-ஆம் தேதி ஜந்தா் மந்தரில் மகளிா் ஒதுக்கீட்டை ஆதரித்து நடைபெற்ற போராட்டத்தின் போது காவல்துறையினரை தடுத்ததுடன், பொதுச் சாலையை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.

Advertisement

Advertisement

மேலும், அரசு பணியில் இருந்த அதிகாரியைத் தடுக்க தாக்குதல் அல்லது வன்முறை பயன்படுத்துதல், சட்டப்படி வெளியிடப்பட்ட உத்தரவுகளை மீறுதல், பொதுப் பாதையில் தடங்கல் ஏற்படுத்துதல் போன்ற குற்றச்சாட்டுகள் தொடா்பாக கடந்த டிசம்பரில் நீதிமன்ற வழக்கில் குற்றச்சாட்டுகளை பதிவு செய்ய உத்தரவிட்டது.

இந்த உத்தரவுக்கு எதிராக ஆல்கா லம்பா தாக்கல் செய்த மறுஆய்வு மனு பிப்.6-ஆம் தேதி நிராகரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.