திருநெல்வேலி

கோயில்களில் கண்சிமிட்ட மறுக்கும் கண்காணிப்பு கேமராக்கள்

 திருநெல்வேலி, மே 17: தமிழக கோயில்களில் பொருத்தப்பட்ட கண்காணிப்பு கேமராக்கள் முறையான பராமரிப்பின்றி செயலிழந்து வருவதாக பக்தர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.  தீவிரவாத அச்சுறுத்தல் காரணமாக தமிழகத்தில் உள்

கே.வாசுதேவன்

 திருநெல்வேலி, மே 17: தமிழக கோயில்களில் பொருத்தப்பட்ட கண்காணிப்பு கேமராக்கள் முறையான பராமரிப்பின்றி செயலிழந்து வருவதாக பக்தர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

 தீவிரவாத அச்சுறுத்தல் காரணமாக தமிழகத்தில் உள்ள முக்கியமான கோயில்களில் கண்காணிப்பு கேமராக்களைக் பொருத்த அரசு உத்தரவிட்டது.

 அதன்படி, இந்து அறநிலையத்துறையின் கீழ் உள்ள 65 முதல்நிலை கோயில்கள் உள்பட சுமார் 150 கோயில்களில் கண்காணிப்பு கேமராக்களைக் பொருத்த அத்துறை உத்தரவிட்டது.

 ஒவ்வொரு கோயிலிலும் குறைந்தபட்சம் 6 கேமராக்கள் பொருத்தப்பட வேண்டும் என இந்து அறநிலையத்துறை கூறியிருந்தது.

 ஆனால், அதற்குரிய நிதி, எந்த கோயிலுக்கும் ஒதுக்கீடு செய்யப்படவில்லை. மாறாக கண்காணிப்பு கேமரா பொருத்துவதற்கு ஆகும் செலவை, நன்கொடையாளர்கள் மூலம் திரட்டிக் கொள்ள வேண்டும் என வாய்மொழி உத்தரவிடப்பட்டது.

 இதன் காரணமாக நல்ல நிதியாதாரத்துடன் இருக்கும் சுமார் 100 கோயில்களில் மட்டும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டன.

 நிதியாதாரம் குறைந்த கோயில்களில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்துவதற்கு கோயில் நிர்வாகங்கள் இன்றுவரை தடுமாறி வருகின்றன.

 பழனி, திருச்செந்தூர், மதுரை மீனாட்சியம்மன் உள்ளிட்ட மக்கள் அதிகம் கூடும் கோயில்களில் மட்டும் 25-க்கும் அதிகமான கேமராக்கள் பொருத்தப்பட்டன.

 இருப்பினும் பல்வேறு கோயில்களில் கண்காணிப்பு கேமராக்களின் நிலைமை பரிதாபத்துக்கு உரியதாக உள்ளது. போதிய நிதியாதாரம் இல்லாததால் பெரும்பாலான கோயில்களில் பழைய கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

 ஒரு சில கோயில்களில் மிகவும் தரம் குறைவான கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

 அந்த கேமராக்கள் பொருத்தப்பட்ட சில நாள்களிலேயே பழுதடைந்துவிட்டன.

 மேலும் கண்காணிப்பு கேமராக்களை இயக்குவது குறித்தும், பராமரிப்பது குறித்தும் கோயில் ஊழியர்களுக்கு முறையான பயிற்சி அளிக்கப்படாததினால், சில கோயில்களில் கண்காணிப்பு கேமராக்கள் வெறும் பொம்மைகளாகக் காட்சியளிக்கின்றன. இன்னும் சில கோயில்களில் கேமராவும், டி.வி.யும் பொழுதுபோக்கிற்கு பயன்படுத்தப்படுவதாகக் கூறப்படுகிறது.

 கோயில்களில் பாதுகாப்பை பலப்படுத்துவற்காக பொருத்தப்பட்ட கண்காணிப்பு கேமராக்கள், எவ்வித பயனும் இல்லாமல் இருப்பது பக்தர்களிடம் பெருத்த ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

 இது விஷயத்தில் இந்து அறநிலையத்துறை சிறப்புக் கவனம் செலுத்தி தமிழக கோயில்களில் கண்காணிப்பு கேமராக்கள் நல்ல முறையில் இயங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 மேலும், கண்காணிப்பு கேமராக்களை பொருத்த ஒவ்வொரு கோயிலுக்கும் போதிய நிதி ஒதுக்க வேண்டும்.

  கேமராக்களை இயக்குவதற்கும், பராமரிப்பதற்கும் பயிற்சி பெற்ற ஊழியர்களை நியமிக்க வேண்டும் என்றும் பக்தர்கள் வலியுறுத்துகின்றனர்.

 இந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள இந்து அறநிலையத்துறை தாமதப்படுத்தும் பட்சத்தில், கோயில்களில் இருந்து கேமராக்கள் காணாமல் போய்விடும் அபாய நிலை இருப்பதாக பக்தர்கள் எச்சரித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கிணற்றில் தவறிவிழுந்த விவசாயி உயிரிழப்பு

திருநள்ளாறு கோயிலில் சனிப் பெயா்ச்சி விழா பூா்வாங்க பூஜைகள் தொடக்கம்! - துணைநிலை ஆளுநா் பங்கேற்பு!

மாா்த்தாண்டம் அருகே வரதட்சிணை கொடுமை: கணவா் உள்ளிட்ட 4 போ் மீது வழக்கு

இளைஞா் மீது தாக்குதல்: 2 போ் மீது வழக்கு

மேட்டூா் அணை பூங்காவில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

SCROLL FOR NEXT