சேது சமுத்திர திட்டத்தை விரைவாக நிறைவேற்ற இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் கோரிக்கை
தூத்துக்குடி, நவ. 24: சேது சமுத்திர திட்டத்தை விரைந்து நிறைவேற்ற வேண்டும் என, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இச் சங்கத்தின் தென்மண்டல 3 நாள் சிறப்பு மாநாடு ஞாயிற்றுக்கிழமை தூத
தூத்துக்குடி, நவ. 24: சேது சமுத்திர திட்டத்தை விரைந்து நிறைவேற்ற வேண்டும் என, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இச் சங்கத்தின் தென்மண்டல 3 நாள் சிறப்பு மாநாடு ஞாயிற்றுக்கிழமை தூத்துக்குடியில் துவங்கியது. பெரம்பூர் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினர் எஸ்.கே. மகேந்திரன் மாநாட்டை துவக்கிவைத்தார்.
சங்கத்தின் மாநில தலைவர் எஸ்.ஜி. ரமேஷ்பாபு, மாநில செயலர் எஸ். கண்ணன், பொருளாளர் எஸ். முத்துகண்ணன், துணைச் செயலர்கள் எஸ். பாலா, எஸ். வேல்முருகன், மாவட்டத் தலைவர் டி. சண்முகராஜ், மாவட்டச் செயலர் பா. புவிராஜ், துணைச் செயலர் எம்.எஸ். முத்து உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
Advertisement
மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
அரசு அலுவலகங்களில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும். சமூக பாதுகாப்புடன் கூடிய வேலைகளை உருவாக்க வேண்டும்.
தென்தமிழக மக்களின் கனவுத் திட்டமான சேது சமுத்திர திட்டத்தை விரைந்து நிறைவேற்ற வேண்டும்.
மூடப்பட்டுள்ள ஸ்பிக் தொழிற்சாலையை உடனடியாக மீண்டும் இயக்க வேண்டும். திருச்செந்தூரில் அரசு பாலிடெக்னிக், சார்பு நீதிமன்றம் அமைக்க வேண்டும்.
அடிக்கடி ஏற்படும் மின்தடையைக் போக்கிட உடன்குடி அனல்மின் நிலைய திட்டப் பணியை உடனே தொடங்க வேண்டும்.
கோவில்பட்டி மக்களின் குடிநீர் பிரச்னையை போக்க புதிய குடிநீர்த் திட்டத்திற்கு உடனே நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மாநாட்டின் கடைசி நாளான செவ்வாய்க்கிழமை பல்வேறு முக்கிய பிரச்னைகள் குறித்த விவாதம் நடைபெற்றது.